• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல்: ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு | public refusal to support the military in pakistan

GenevaTimes by GenevaTimes
May 6, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் சூழல்: ராணுவத்துக்கு ஆதரவு அளிக்க பொதுமக்கள் மறுப்பு | public refusal to support the military in pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் பாகிஸ்​தான் ராணுவத்​துக்கு ஆதரவு அளிக்க பொது​மக்​கள் மறுப்பு தெரிவித்துள்​ளனர். இதனால் அங்கு உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வு​கிறது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ஒரு வீடியோ சமூக வலை​தளங்​களில் பகிரப்​பட்டு வரு​கிறது. அந்த வீடியோ​வில், இந்​தி​யா​வுட​னான போர் பதற்​றம் குறித்து பொது​மக்​களிடம் கருத்து கேட்​கப்​படு​கிறது.

அப்​போது இந்த விவ​காரத்​தில் ராணுவத்​தின் செயல்​பாட்​டுக்கு ஆதரவு அளிக்க அவர்​கள் மறுத்​து​விட்​டனர். இது அந்​நாட்டு ராணுவ தளபதி அசிம் முனிருக்கு சிக்​கலை ஏற்​படுத்தி உள்​ளது. இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள லால் மசூ​தி​யில் சமீபத்​தில் நடை​பெற்ற ஒரு பிரசங்​கத்​தின்​போது, பிரபல தியோபண்டி மதகுரு மவுலானா அப்​துல் அஜீஸ் காசி, “இந்​தி​யா​வுடன் போர் தொடுக்க வேண்​டுமா என்​ப​தற்கு ஆதரவு தெரி​விப்​பவர்​கள் கையை உயர்த்த வேண்​டும்” என கேட்​டுக் கொண்​டார். ஆனால் ஒரு​வர் கூட கையை உயர்த்​த​வில்​லை.

மவுலானா கண்டனம்: இதையடுத்​து, பாகிஸ்​தான் ராணுவம் மற்​றும் ஆட்​சி​யாளர்​களுக்கு மவுலானா கடும் கண்​டனம் தெரிவித்தார். மேலும், “இந்​தி​யா​வை​விட பாகிஸ்​தான் அடக்​கு​முறையைக் கையாள்​கிறது. குறைந்​த​பட்​சம் இந்​தியா ஒரு​போதும் லால் மசூதி அல்​லது வஜிரிஸ்​தான் மீது குண்டு வீச​வில்​லை” என்​றார். கடந்த 2007-ம் ஆண்டு லால் மசூ​தியை முற்​றுகை​யிட்​டது மற்​றும் வஜிரிஸ்​தான் மீது பல முறை நடந்த விமானத் தாக்​குதல் உள்​ளிட்ட பாகிஸ்​தான் ராணுவத்​தின் உள்​நாட்டு அடக்​கு​முறையை அவர் மறை​முக​மாக குறிப்​பிட்​டார்.

மேலும் தற்​போதைய ஆட்​சி​யில், பலூச் மற்​றும் பஷ்துன் பிரிவு மக்​கள், இம்​ரான் கானின் பாகிஸ்​தான் தெஹ்ரீக்​-இ-இன்​சாப் கட்​சி​யினர் (பிடிஐ), மத குரு​மார்​கள் மற்​றும் பத்​திரிகையாளர்​கள் காணா​மல் போன விவ​காரத்​தை​யும் அவர் நினை​வு​கூர்ந்​தார். “பஷ்துன் பிரிவு மக்​கள் மீது ராணுவம் அடக்​கு​முறையைக் கையாண்​டுள்​ளது. இந்​நிலை​யில், இந்​தியா பாகிஸ்​தானை தாக்​கி​னால் பஷ்துன்​களாகிய நாங்​கள் இந்​திய ராணுவத்​தின் பக்​கம் நிற்​போம்” என்​றும் மவுலானா கூறி​யுள்​ளார்.

இந்த கருத்​துகள் சர்ச்​சைக்​குரியவை என்​றாலும், உள்​நாட்​டில் நில​வும் அதிருப்​தியை பிர​திபலிக்​கின்​றன. குறிப்​பாக, பலூச் மற்​றும் பஷ்துன் பிரி​வினரும் பிடிஐ கட்​சி​யினரும் ராணுவத்​துக்கு சவால் விடுத்​துள்​ளனர். இதனால் பாகிஸ்​தானில் உள்​நாட்டு கலகம் வெடிக்​கும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

சிறு​வர்​கள் வெறுப்பு: இங்​கிலாத்​தில் பாகிஸ்​தானிய தந்தை மற்​றும் இந்​திய தாய்க்கு பிறந்​தவர் அட்​னான் சாமி. பிரபல பாடகரும் இசை அமைப்​பாள​ரு​மான இவர், 2016-ல் இந்​தி​யக் குடி​யுரிமை பெற்​றார். இவர் தனது ‘எக்​ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அஜர்​பைஜான் நாட்​டின் பாகு நகர அழகிய வீதி​களில் நடக்​கும்​போது பாகிஸ்​தான் சிறு​வர்​கள் சிலரை சந்​தித்​தேன். அப்​போது அவர்​கள் என்​னிடம், “நீங்​கள் அதிர்​ஷ்ட​சாலி. சரி​யான நேரத்​தில் நீங்​கள் பாகிஸ்​தானை விட்டு வெளி​யேறி விட்​டீர்​கள்.

நாங்​களும் பாகிஸ்​தானை விட்டு வெளி​யேற விரும்​பினோம். நமது ராணுவத்தை நாங்​கள் வெறுக்​கிறோம். நமது நாட்டை அவர்​கள் அழித்​து​விட்​டனர்” என்று கூறினர். இதற்கு நான், “இதனை நான் பல ஆண்​டு​களுக்கு முன்பே உணர்ந்​து​விட்​டேன்​” என்​று கூறினேன்​. இவ்​வாறு அட்​னான்​ ​ சாமி கூறியுள்​ளார்​.



Read More

Previous Post

Pahalgam Attack : இந்தியாவுக்கு முழு ஆதரவு.. பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் கொடுத்த வாக்குறுதி

Next Post

KL மற்றும் சிலாங்கூரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது | Makkal Osai

Next Post
KL மற்றும் சிலாங்கூரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது | Makkal Osai

KL மற்றும் சிலாங்கூரில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட 16 பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin