• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள் | Ajit Doval became a beggar to spy in Pakistan

GenevaTimes by GenevaTimes
August 27, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள் | Ajit Doval became a beggar to spy in Pakistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே கிரி என்ற மலைக்​கி​ராமத்​தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்​தார். உத்தர பிரதேச முன்​னாள் முதல்​வர் ஹேம்​வதி நந்​தன் பகு​குணா​வின் நெருங்​கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார்.

கேரள காவல் துறை​யில் பணி​யாற்​றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்​டில் தலச்​சேரி​யில் நடை​பெற்ற கலவரத்தை கட்​டுப்​படுத்தி நாடு முழு​வதும் பிரபலம் அடைந்​தார். கடந்த 1972-ம் ஆண்​டில் இந்​திய உளவுத் துறை​யில் அஜித் தோவல் இணைந்​தார்.

மிசோரமில் செயல்​பட்ட தீவிர​வாத குழுக்​கள் குறித்த தகவல்​களை திரட்ட அவர் அனுப்​பப்​பட்​டார். அவரது தீவிர முயற்​சி​யால் கடந்த 1986-ம் ஆண்​டில் மத்​திய அரசுக்​கும் தீவிர​வாத குழுக்​களுக்​கும் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டங்​கள் குறித்த தகவல்​களை திரட்ட அந்த நாட்​டுக்கு அஜித் தோவல் அனுப்​பப்பட்​டார். இதற்​காக இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள இந்​திய தூதரகத்​தில் அவர் பணி​யமர்த்​தப்​பட்​டார். அப்​போது பாகிஸ்​தானின் இளம் அரசி​யல் தலை​வர் நவாஸ் ஷெரீபின் மிக நெருங்​கிய நண்​ப​ராக தோவல் மாறி​னார்.

பாகிஸ்​தான் தலைநகர் இஸ்​லா​மா​பாத் அருகே கஹுதா என்ற பகுதி உள்​ளது. அங்கு கான் ஆராய்ச்சி மையம் செயல்​படு​கிறது. அந்த மையத்​தில் பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டப் பணி​கள் நடை​பெறு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகின. கஹுதா பகு​திக்கு அஜித் தோவல் சென்​றார்.

பிச்​சைக்​கார​ராக வேட​மிட்டு கான் ஆராய்ச்சி மையத்தை வேவு பார்த்​தார். அங்​குள்ள சலூன் கடை​யில் ஆராய்ச்சி மையத்​தின் விஞ்​ஞானிகள் முடி​திருத்​தம் செய்​தனர். அந்த சலூன் கடைக்கு சென்ற அஜித் தோவல், முடிகளை சேகரித்து இந்​தி​யா​வுக்கு அனுப்பி வைத்​தார்.

அந்த முடிகளை ஆய்வு செய்​த​போது யுரேனி​யம் உள்​ளிட்ட கதிர்​வீச்சு இருந்​தது தெரிய​வந்​தது. இதன்​மூலம் பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டம் கண்​டு​பிடிக்​கப்​பட்​டு, உலக நாடு​களுக்கு ஆதா​ரத்​துடன் தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. சர்​வ​தேச நாடு​களின் அழுத்​தம் காரண​மாக பாகிஸ்​தானின் அணு சக்தி திட்​டங்​கள் சுமார் 15 ஆண்​டு​கள் தாமத​மாகின.

கடந்த 1988-ம் ஆண்​டில் பஞ்​சாபின் அமிர்​தசரஸில் உள்ள பொற்​கோயி​லில் காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள் நுழைந்​தனர். ஏற்​கெனவே கடந்த 1984-ம் ஆண்​டில் நடத்​தப்​பட்ட புளூ ஸ்டார் ஆபரேஷ​னால் பொது​மக்​கள் கடும் அதிருப்​தி​யில் இருந்​தனர். எனவே அது​போன்ற நடவடிக்​கையை மத்​திய அரசு எடுக்க விரும்​ப​வில்​லை. எனவே காலிஸ்​தான் தீவிர​வா​தி​களை அடக்​கும் பொறுப்பு அஜித் தோவலிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இதன்​படி பொற்​கோ​யிலுக்​குள் நுழைந்த தோவல், காலிஸ்​தான் தீவிர​வா​தி​களிடம் தன்னை பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவாளி என்று அறி​முகம் செய்து கொண்​டார். காலிஸ்​தான் தீவிர​வா​தி​களோடு தங்​கியிருந்து அவர்​கள் குறித்த முழு​விவரங்​களை​யும் என்​எஸ்ஜி படைக்கு ரகசி​ய​மாக வழங்​கி​னார்.

தோவல் வழங்​கிய தகவல்​களின் அடிப்​படை​யில் என்​எஸ்ஜி படை​யின் கமாண்டோ வீரர்​கள், தொலை​வில் இருந்து ஒவ்​வொரு தீவிர​வா​தி​யாக சுட்​டுக் கொன்​றனர். இறு​தி​யில் காலிஸ்​தான் தீவிர​வா​தி​கள், இந்​திய ராணுவத்​திடம் சரண் அடைந்​தனர். இதற்​காக தோவலுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்​கப்​பட்​டது.

கடந்த 1990-ம் ஆண்​டில் காஷ்மீர் தீவிர​வாதத்தை கட்​டுப்​படுத்த தோவல் அனுப்​பப்​பட்​டார். அப்​போது காஷ்மீரின் மிகப்​பெரிய தீவிர​வா​தி​யாக அறியப்​பட்ட குகா பாரேவை சந்​தித்த தோவல் அவரது மனதை மாற்​றி​னார். இதன்​காரண​மாக 1996-ம் ஆண்​டில் நடை​பெற்ற காஷ்மீர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் குகா பாரே போட்​டி​யிட்​டார். இதன்​மூலம் காஷ்மீரில் தீவிர​வாதம் ஓரளவுக்கு குறைந்​தது.

கடந்த 1999-ம் ஆண்டு காந்​தஹார் விமான கடத்​தலின்​போது, தீவிர​வா​தி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​திய இந்​திய குழு​வில் தோவலும் இடம்​பெற்​றிருந்​தார். கடந்த 1999-ம் ஆண்டு கார்​கி​லில் பாகிஸ்​தான் ராணுவம் ஊடுரு​வியது. இதைத் தொடர்ந்து வாஜ்​பாய் ஆட்​சிக் காலத்​தில் உளவுத் துறை தலை​வ​ராக அஜித் தோவல் நியமிக்​கப்​பட்​டார்.

மன்​மோகன் சிங் ஆட்​சிக் காலத்​தி​லும் உளவுத் துறை தலை​வ​ராக இருந்த தோவல் கடந்த 2005-ம் ஆண்​டில் ஓய்வு பெற்​றார். அப்​போது அவருக்கு பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட​வில்​லை. மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்​ராகிமின் மகள் திரு​மணம் 2005-ம் ஆண்டு துபா​யில் நடை​பெற்​றது. திரு​மணத்​தின்​போது தாவூதை கொலை செய்ய இந்​திய உளவுத் துறை திட்​ட​மிட்​டது.

இந்த ஆபரேஷனுக்கு தோவல் வழி​காட்​டி​யாக செயல்​பட்​டார். இதன் ஒரு பகு​தி​யாக தாவூத்​தின் வலது கரம் என்று அழைக்கப்பட்ட விக்கி மல்​ஹோத்​ரா​வுடன் தோவல் நெருக்​க​மா​னார். இந்​திய உளவுத் துறை​யின் திட்​டத்தை அறிந்த தாவூத், மகளின் திரு​மணத்​தில் பங்​கேற்​க​வில்​லை.

இறு​தி​யில் தோவலின் உதவி​யுடன் விக்கி மல்​ஹோத்ரா மட்​டும் கைது செய்யப்பட்டார். கடந்த 2014-ம் ஆண்டு நாட்​டின் பிரதம​ராக நரேந்​திர மோடி பதவி​யேற்​றார்​. அப்​போது முதல்​ அஜித்​ தோவல்​ தேசிய பாது​காப்​பு ஆலோசக​ராக செயல்​பட்​டு வருகிறார்​.



Read More

Previous Post

Tamilmirror Online || மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள்

Next Post

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: அமைச்சர் டிஆர்பி ராஜா மகள் உட்பட தமிழக வீரர்கள் நால்வர் பதக்கம் வென்று அசத்தல்! | விளையாட்டு

Next Post
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: அமைச்சர் டிஆர்பி ராஜா மகள் உட்பட தமிழக வீரர்கள் நால்வர் பதக்கம் வென்று அசத்தல்! | விளையாட்டு

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்: அமைச்சர் டிஆர்பி ராஜா மகள் உட்பட தமிழக வீரர்கள் நால்வர் பதக்கம் வென்று அசத்தல்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin