பாகிஸ்தானிலேயே அதிக பணக்காரரான இந்து நபர் யார் என்பது குறித்து அவரது சொத்து விபரங்கள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. சிலர் நாட்டை ‘தோல்வியடைந்த அரசு’ என்று அழைக்கும்போது, பலர் நாட்டின் இந்த நிலைக்கு அரசியல் வர்க்கத்தை சுட்டிக்காட்டுகின்றனர். அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து, எரிபொருள் விலை வரை அனைத்துமே அதிக விலையில் உள்ளதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேநேரம் எல்லோரும் நெருக்கடியில் வாழ்கிறார்களா என்றால் அதற்கு இல்லை என்றுதான் பதில் கூற வேண்டும். ஆக்கபூர்வமான வழிகளில் சொத்துக்களை சேர்த்தவர்கள் எந்த ஒரு பொருளாதார நெருக்கடியிலும் பாதிக்கப்படுவதில்லை.
அந்த வகையில் பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் நாட்டின் மிகவும் பணக்கார இந்து பெண்ணான சங்கீதா பல்வேறு பெண்களுக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறார். பிரிவினைக்கு முன்பு 1947 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி இந்தியாவில் பிறந்த சங்கீதா பிரபல நடிகையாக இருந்தது மட்டுமல்லாமல் இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார்.
45 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சினிமா துறையில் இருந்து வரும் சங்கீதா கோஹினூர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது அசாத்தியமான திறமை அர்ப்பணிப்பு உள்ளிட்டவை பாகிஸ்தான் திரைத்துறையில் இவரை தவிர்க்கமுடியாத ஒருவராக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க – வறுமை ஒழிய இன்னும் 200 ஆண்டுகளாகும்.. ஷாக் கொடுத்த புள்ளிவிவரம்!
இவர் ஆண்டு ஒன்றுக்கு ரூ.39 கோடி அளவுக்கு சம்பாதிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்தான் பாகிஸ்தானில் வசிக்கும் மிகவும் பணக்கார இந்து பெண் என்பது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான் நாடு நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் நிலையில் அந்த நாட்டை சேர்ந்த இந்து பெண்ணான சங்கீதா செல்வத்தை அள்ளி குவிப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவரது திறமை மட்டுமே காரணம் என்று கூறுகிறார்கள்.
அத்துடன் ஒரு துறையின் மீதான மிகப் பெரும் ஆர்வம் மற்றும் கடின உழைப்பு தான் பேரும் புகழையும் பெற்றுத் தரும் என்பது சங்கீதாவின் சங்கீதா கடைபிடிக்கும் கொள்கையாக உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…