• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹ்ரைனில் கைவிடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்பு : மெய்சிலிர்க்க வைக்கும் ‘வந்தாரா’ கதை

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
பஹ்ரைனில் கைவிடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்பு : மெய்சிலிர்க்க வைக்கும் ‘வந்தாரா’ கதை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் உள்ள ஒரு விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமாகும். இது ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் வந்தாரா திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகனான அனந்த் அம்பானி வந்தாரா திட்டத்தை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வந்தாரா திட்டமானது பல கைவிடப்பட்ட அல்லது உதவியை நாடும் விலங்குகளுக்கு வாழ்க்கை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்த வகையில், பஹ்ரைனில் கைவிடப்பட்ட விலங்குகள் வந்தாரா திட்டத்தின் ஒரு பகுதியான, கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2022 இல், பஹ்ரைனில் நிலவிய இக்கட்டான சூழ்நிலையால் அழிந்து வரும் உயிரினங்கள் உட்பட பல விலங்குகளின் கூட்டம் கைவிடப்பட்டது.இதையடுத்து, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த இந்த விலங்குகளுக்கு இந்திய விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் புத்துயிர் அளித்துள்ளது.

கைவிடப்பட்ட இந்த விலங்குகளில், போர்னியோ ஒராங்குட்டான், சிம்பான்சி, பழுப்பு நிற கரடி, சிறுத்தை, சிங்கம், சிறுத்தை புலி, நைல் முதலை மற்றும் ஆர்ட்வார்க் போன்ற பல்வேறு இனங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முரண்பாடுகளை தாண்டி, கைவிடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வன வலங்குகளுக்கு மறுவாழ்வு அளிப்பதில் கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் முன்னெடுப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்ததுடன் பாராட்டுக்களையும் பெற வைத்துள்ளது.

ஆரம்பத்தில், நவம்பர் 2022 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல் ஐனில் உள்ள கங்காரு விலங்குகள் பராமரிப்பு மையத்தில் (KASC) இந்த விலங்குகளுக்கு தற்காலிக அடைக்கலம் வழங்கப்பட்டது. இருப்பினும், அவற்றின் நீண்டகால நல்வாழ்வை உறுதி செய்ய மற்றும் அப்போதைய சூழலின் சிக்கல்களைப் புரிந்துகொண்ட KASC, கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் உட்பட பல்வேறு அமைப்புகளின் உதவியை நாடியது.

அதன் ஒருபகுதியாக, பஹ்ரைனில் மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்த போர்னியோ ஒராங்குட்டான் இப்போது கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் நிம்மதியான சூழலில் அங்குள்ள நிபுணர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, சிம்பன்சி உட்பட 200 க்கும் மேற்பட்ட விலங்குகள் பஹ்ரைனில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியாவில் உள்ள கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் புதிய சரணாலயத்தில் தற்போது பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இதில், பெரும்பாலான விலங்குகள் பிப்ரவரி 7 மற்றும் மார்ச் 4, 2023 ஆகிய தேதிகளில் இரண்டு கப்பல்களில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும், சில விலங்குகள் பயணிக்க ஏதுவான சூழல் இல்லாததால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

இவ்வாறாக பஹ்ரைனில் நிலவிய மோசமான சூழ்நிலையில் கைவிடப்பட்ட இந்த விலங்குகள் இப்போது பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க – MODI VANTARA : உலகின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா வந்தாராவை பார்வையிடும் பிரதமர் மோடி

இவ்வாறாக, கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தின் அர்ப்பணிப்பும், உறுதியும் இந்த விலங்குகளைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்காற்றிய அதே நேரத்தில் அதன் சாத்தியமான பராமரிப்பையும் உறுதி செய்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க கூட்டு மீட்பு நடவடிக்கை அனைவராலும் பாராட்டப்படுகிறது. ஆர்வமுள்ள தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் அயராத முயற்சிகளின் மூலம், இந்த விலங்குகளுக்கு மறுவாழ்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

March 01, 2025 5:43 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பஹ்ரைனில் கைவிடப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்பு : மெய்சிலிர்க்க வைக்கும் ‘வந்தாரா’ கதை

Read More

Previous Post

நாளாந்தம் இரத்து செய்யப்படும் 50 தொடருந்து சேவைகள் : காரணம் தெரியுமா…!

Next Post

வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி கடும் வாக்குவாதம் | ukraine Zelenskyy argument with us Trump during meeting at White House

Next Post
வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி கடும் வாக்குவாதம் | ukraine Zelenskyy argument with us Trump during meeting at White House

வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பின்போது ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி கடும் வாக்குவாதம் | ukraine Zelenskyy argument with us Trump during meeting at White House

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin