பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஏப். 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது. இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே 4 நாள்கள் நடந்த போர், பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு நாளை(ஜூன் 6) செல்லவிருக்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

