• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா | This was the right method to reply: Omar Abdullah On Operation Sindoor

GenevaTimes by GenevaTimes
May 7, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பஹல்காம் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சரியான பதிலடி: உமர் அப்துல்லா | This was the right method to reply: Omar Abdullah On Operation Sindoor
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்க ராணுவத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி அழித்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரிலான இந்திய ராணுவத்தின் இந்த துல்லிய தாக்குதல்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தாக்குதலின் மூலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, “பஹல்காமில் 26 அப்பாவி பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையிலும், காட்டுமிராண்டித்தனமாகவும் கொல்லப்பட்ட பிறகு, இந்தியா தனது பதிலடி உரிமையை பொருத்தமான மற்றும் விகிதாசார முறையில் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாகிஸ்தானின் எந்தவொரு ராணுவ இலக்கும் தாக்கப்படவில்லை. அதேபோல், பொதுமக்களும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசும் இந்திய பாதுகாப்புப் படைகளும் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பயங்கரவாத தளங்களை மட்டுமே தாக்கியுள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் இந்திய எல்லையின் சில பகுதிகளில் குண்டுவீசித் தாக்கியுள்ளது. அதில் பொதுமக்கள் குறிவைக்கப்பட்டனர். அவர்கள்தான் தாக்குதலைத் தொடங்கினர், நாம் அல்ல. நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தோம். நம்மில் யாரும் போரை விரும்பவில்லை. நிலைமை மீண்டும் மேம்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அதற்கு முதலில் பாகிஸ்தான் தனது துப்பாக்கிகளைக் கீழே இறக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு விரைவாகப் பழிவாங்கிய இந்திய ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களை நான் பெருமையுடன் வணங்குகிறேன். அவர்களின் ஈடு இணையற்ற துணிச்சல் மற்றும் துல்லியத்தால், நமது நாடு மன உறுதியுடன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். இன்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், உலகம் நமது வலிமையையும் உறுதியையும் கண்டுள்ளது. நமது நாடு பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டு, நமது ஆயுதப் படைகளுக்கு உறுதியாக ஆதரவளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

வடக்கில் தோல்வியை தழுவிய அநுர கட்சி : காரணத்தை அம்பலமாக்கும் முன்னாள் முதலமைச்சர்

Next Post

தடகள வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! பயன்பாட்டுக்கு வந்த சிந்தடிக் ஓடுதளம்…

Next Post
தடகள வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! பயன்பாட்டுக்கு வந்த சிந்தடிக் ஓடுதளம்…

தடகள வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! பயன்பாட்டுக்கு வந்த சிந்தடிக் ஓடுதளம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin