Last Updated:
பஹல்காமில் தாக்குதலுக்கு பிறகு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி பெற்ற எம்.எஸ்.தோனியின் பெயர் இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்த நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி குறித்து சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
கிரிக்கெட்டில் அவர் அளித்த பங்களிப்பிற்காகவும், இந்திய நாட்டின் மீது அவர் வைத்துள்ள பற்றின்காரணமாகவும், கடந்த 2011ஆம் ஆண்டு அவருக்கு கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது.
106வது பிராந்திய இராணுவ பட்டாலியனில் சேர்ந்த எம்.எஸ்.தோனி, அவ்வப்போது இந்திய ராணுவத்தினருடன் தனது நேரத்தை செலவிடுவார். கடந்த 2015ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்கு முன்பு இந்திய ராணுவத்தில் தமது பதவி பணிகளை செய்து ரோந்து மேற்கொண்டார் தோனி.
இதையடுத்து ஆக்ராவில் உள்ள பயிற்சி மையத்தில், பாராஷூட் பயிற்சிகளை செய்து தகுதியான பாராசூட் வீரராக தமது தகுதியை உயர்த்திக்கொண்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள மையத்திலும் பாராஷூட் பயிற்சியை பெற்றார்.
இந்த நிலையில், காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், தோனியின் பெயரும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தக்க நீதியும், குற்றம் செய்தவர்களுக்கு கனவிலும் நினைக்காத பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியது குறிப்பிடத்தக்கது.
2025 ஐபிஎல்-இல் எம்.எஸ்.தோனி:
ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் எம்.எஸ்.தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த தொடரில் கிட்டத்தட்ட வெளியேறிய நிலையில், அந்த அணியில் தோனியின் ஆட்டத்தை தவிர மற்ற மூத்த வீரர்களின் ஆட்டம் யாரையும் திருப்தி படுத்தவில்லை. இருந்தாலும், சேக் ரஷீத், ஆயுஷ் மாத்ரே, டிவால்ட் பிரீவிஸ் போன்ற இளம் வீரர்களை சென்னை அணி கண்டுபிடித்துள்ளது அடுத்த சீசனில் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
April 29, 2025 11:47 AM IST


