• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பவுலிங்கில் ஆஸ்திரேலியாவை திணறடித்த ஓமன் அணி… 40 ரன்களில் வெற்றியை இழந்தது…

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
பவுலிங்கில் ஆஸ்திரேலியாவை திணறடித்த ஓமன் அணி… 40 ரன்களில் வெற்றியை இழந்தது…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இருபது ஓவர் உலகக் கோப்பை தொடரில் ஓமனுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணி, 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அனுபவம் குறைந்த ஓமன் அணி பல முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை பவுலிங்கில் திணறடித்தது.

தொடரின் 10ஆவது லீக் போட்டி கரீபியன் நாடான பார்படாஸில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டேவிட் வார்னர் 56 ரன்களும், நடு வரிசையில் களமிறங்கிய ஸ்டாய்னிஸ்,  67 ரன்களும் குவித்தனர்.

விளம்பரம்

பின்னர் 165 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்களை மட்டுமே அந்த அணி பெற்றது. இதனால் 39 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றியைப் பெற்றது. பேட்டிங்கில் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் கலக்கிய ஸ்டாய்னிஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

அனுபவம் குறைந்த ஓமன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஓமன் அணியின் பவுலர்கள், ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர்.

விளம்பரம்

இதையும் படிங்க – World Cup T20 : ரோகித் சர்மா அரைசதம்… அயர்லாந்து அணியை எளிதாக வென்றது இந்தியா…

குறிப்பாக அந்த அணியின் கேப்டன் அகிப் இல்யாஸ் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இன்னொரு பவுலரான ஷகீல் அகமது 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே அளித்தார். இதேபோன்று பேட்டிங்கிலும் ஓமன் அணி சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கூடுதலாக 40 ரன்கள் சேர்த்திருந்தால், ஜாம்பவான் அணியான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Weather Update Today : நீலகிரி, கோயம்புத்தூர்,திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

Next Post

புதிய செல்போன் வாங்கப் போறீங்களா? ஜூனில் வந்த போன்கள் பற்றி…

Next Post
புதிய செல்போன் வாங்கப் போறீங்களா? ஜூனில் வந்த போன்கள் பற்றி…

புதிய செல்போன் வாங்கப் போறீங்களா? ஜூனில் வந்த போன்கள் பற்றி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin