சென்னை:
இயக்குநர் சிவகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு புதிய திரைப்படத்தில், ராதிகா சரத்குமார் ‘பவுனுத்தாய்’ என்ற 75 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் 75 வயது கிழவி வேடம் என்றதும் சற்றே தயங்கிய ராதிகா, பின்னர் தனது கணவர் சரத்குமாரின் ஊக்கத்தினால் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
கேரளாவைச் சேர்ந்த வினிஷ் என்ற ஒப்பனை கலைஞரின் உதவியுடன், ராதிகா இந்த கதாபாத்திரத்திற்காக முழுமையாக உருமாறியுள்ளார். அவரது இந்தத் தோற்றம் திரைத்துறையினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பவுனுத்தாய் தோற்றத்தில் இருக்கும் தனது புகைப்படத்தை நடிகர் கமல்ஹாசனுக்கு ராதிகா அனுப்பியுள்ளார். அதைப் பார்த்த கமல், “வேறு எந்தக் கதாநாயகியும் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டதில்லை, நீ சாதித்துவிட்டாய்” என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
ராதிகாவின் இந்த அர்ப்பணிப்பான நடிப்பைப் பார்த்து, அவருக்குத் தேசிய விருது கிடைக்கும் வகையில் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுவதாக நடிகர் சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.




