Last Updated:
டெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
பழைய வாகனத் தடைக்கு எதிரான வழக்கில் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கினால் வழக்கு தொடரப்படும் என்ற ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களை டெல்லியில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கவும் தடை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி எரிபொருள் வழங்கிய பெட்ரோல் பங்குகள் மீது டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி காவல்துறையின் நடவடிக்கையை எதிர்த்து டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மினி புஷ்கர்ணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதிலளிக்க டெல்லி அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
July 05, 2025 8:34 AM IST