சிங்கப்பூர்: பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்காக ஓர் வீட்டிற்கு சென்ற ஊழியர் அங்கிருந்த பெண்ணை சீரழித்தாக அக்டோபர் 28 அன்று குற்றம் சாட்டப்பட்டது.
புதுப்பித்தல் ஒப்பந்ததார ஊழியரான 49 வயதான கோ லீ ஹ்வா சிங்கப்பூர் நிரந்தரவாசி (PR) ஆவார்.
2021ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அந்த பெண் உறவுக்கு சம்மதம் தெரிவித்ததாகவும், அதை ரசித்து மகிழ்ந்ததாக எனக்கு தெரிந்தது என்றும் குற்றம் சாட்டப்பட்ட ஊழியர் நீதிபதியிடம் கூறினார்.
இருப்பினும், கோவின் பேச்சுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூல சாட்சியம் நம்பகமானது என்று நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
கோ மீது ஒரு பாலி#ல் வன்கொ*மை குற்றச்சாட்டு மற்றும் இரண்டு மானபங்க குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கோ திருமணமான ஆடவர், இவருக்கான தண்டனை பின்னர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொது வெளியில் கடும் மது போதையில் இருந்த 39 வயதுமிக்க நபர் கைது

