நீதிமன்றத்தின் கேள்விகள்
விசாரணையின்போது, நீதிபதி புகழேந்தி, அறுபடை வீடு மாதிரிகளை வைத்து வழிபடுவது ஆகம விதிகளுக்கு உட்பட்டதா எனக் கேள்வி எழுப்பினார். மனுதாரர் தரப்பில், ஆகம விதிகளின்படி வழிபாடு நடைபெறும் எனவும், பிரசாதம் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில், 12 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், தினமும் 200 முதல் 300 பேர் கூடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதி, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு இதே முறையில் அனுமதிக்கப்பட்டபோது, மதுரையில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். காவல்துறை நடுநிலையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய நீதிபதி, உதவி காவல் கண்காணிப்பாளரை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

