
ஆந்திர மாநிலம் சத்தியசாய் மாவட்டத்தில் கிராம உயர்நிலைப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்தவர் சேத்தன் குமார். சம்பவத்தன்று பள்ளி முடிந்து அங்கிருந்து புறப்பட்ட மாணவன் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. சிறுவனை இரவு முழுவதும் தேடிப் பார்த்த பெற்றோர், இறுதியாக தங்கள் மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தனர்.
விரைந்து செயல்பட்ட போலீசார் அப்பகுதி முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது, மர்ம நபர்கள் இரண்டு பேர் மாணவனை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிள் சென்ற வழித்தடங்கள் அனைத்திலும் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியபோது, கர்நாடக மாநில எல்லையான மடக்கசீரா பகுதி வனப்பகுதியில் மாணவனை சடலமாகக் கண்டுபிடித்தனர்.
மாணவனை கடத்திய கும்பல், அவனை கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது உறுதியாகியுள்ளது. சிறுவன் சேத்தன் குமார் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:
பெண்ணை மயக்கி ஆபாச வீடியோ – விமான நிலையத்தில் அலேக்காக தூக்கிய போலீஸ்!
பள்ளி மாணவனை எதற்காக கடத்தினார்கள்? கடத்தப்பட்ட சிறுவனை எதற்காக கொலை செய்தார்கள்? பெற்றோருடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக சிறுவன் கொலையா? அல்லது கொலைக்காரர்களுக்கும் சிறுவனுக்கும் ஏதேனும் நேரடி தொடர்பா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
8ஆம் வகுப்பு மாணவர் கடத்தி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)