Last Updated:
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் புழு மற்றும் பூச்சிகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம், மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலத்திலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தின் ஒரு மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் புழு மற்றும் பூச்சிகள் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கொப்பல் தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் உணவு வாங்கி சாப்பிட பார்த்தபோது, அதில் ஏராளமான புழுக்கள் மற்றும் பூச்சிகள் இறந்த நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக இது குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து அந்த உணவை மாணவர்கள் கீழே வீசியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
Worm-infested rice found in midday meals at Koppal government schools
Serious concerns have been raised over the quality of food served under the midday meal scheme in parts of Koppal district, after worms were found in rice supplied to government schools, posing a potential… pic.twitter.com/isCy3jmdOM
— Karnataka Portfolio (@karnatakaportf) December 15, 2025
இது தொடர்பாக பேசியுள்ள பள்ளி மேம்பாட்டுக் குழுவின் தலைவர் ஹனுமந்தப்பா ஹட்டி, “இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. நான் சமையல்காரர்களை அழைத்து அரிசி மற்றும் பருப்பை நன்றாகக் கழுவி சமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினேன்.
புழுக்கள் இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பொருள் மாற்றப்பட வேண்டும். இருப்பினும், அக்ஷர தசோஹா அதிகாரிகள் இருப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியை விநியோகிப்பதால், குழந்தைகள் அத்தகைய சமைத்த உணவை சாப்பிட வேண்டியுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆசிரியர்கள் பரிசோதித்து வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
December 15, 2025 4:03 PM IST


