Last Updated:
சதுரங்க போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை சுமார் 80 மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், பள்ளி அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் ஆர்வத்துடன் மாணவ, மாணவர்கள் கலந்துகொண்டு பரிசுகளை வென்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுடைய சதுரங்க திறமைகளை ஊக்குவிக்கும் அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சதுரங்க போட்டியில் மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் சிந்தனைத் திறனை வளர்க்கக்கூடிய அளவிற்கு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு சதுரங்க போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை சுமார் 80 மாணவிகள் பங்கேற்று விளையாடினர். மூன்று சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
July 06, 2025 3:33 PM IST