கோலா திரெங்கானு:
ஜோகூரின் பொந்தியான் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படும் மதுபான ஏலத்துக்கு உரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் பட்லினா சைடிக் தெரிவித்தார்.
இந்த சம்பவம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன், இது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
“கல்வி நிறுவனங்களில் ஏற்படும் எந்தவொரு ஒழுங்கீனங்களுக்கும் அல்லது விதி மீறல்களுக்கும் நாங்கள் ஈடுகொடுக்கமாட்டோம். இந்த விவகாரத்தைக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முழுமையாக ஒப்படைத்துள்ளோம். விசாரணையின் முடிவை உறுதியாக கவனிக்கவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்று அவர் கூறினார்.
இன்று திரெங்கானுவில் நடைபெற்ற மதானி மக்கள் திட்டம் (PMR) 2025 நிறைவு விழாவில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இதை தெரிவித்தார்.
அத்துடன், அந்த ஏலத்தின் போது ஏற்பட்டதாக கூறப்படும் முறையீடுகல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், கல்வி அமைச்சு தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.




