• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிளிநொச்சி – பளை பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று நடத்தப்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போலிச் செய்தி குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



இந்தநிலையில் விசாரணைகளில் தெரியவந்த விடயங்கள் குறித்து காவல்துறையினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.



அந்த அறிக்கையில், குறித்த காணொளிக்கு அமைய அந்த இடமானது கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு முக்கொம்பன் பகுதி என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகள் 



பளை பகுதியில் உள்ள அடர்ந்த காட்டை அழித்து 3 மாடிக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அது விடுதலைப் புலிகளின் முகாம் எனவும், இங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் சந்தேகநபர் காணொளியில் தெரிவித்திருந்தார்.

பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல் | Training Camp In Kilinochchi Police Investigation



இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.



அவ்வாறு சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரங்கள் அடிப்படையற்ற மற்றும் போலியானது என முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த இடத்தை மையமாகக் கொண்டு வெடிபொருட்கள் உற்பத்தி, சட்டவிரோத பொருட்கள் உற்பத்தி அல்லது குண்டு தயாரிப்பு இடம்பெறுவதாக விசாரணைகளில் எவ்வித ஆதாரங்களும் இல்லை.

விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

மேலும், விடுதலைப் புலிகள் அல்லது வேறு ஏதேனும் பயங்கரவாத அமைப்பு அல்லது தீவிரவாத அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான எவ்வித நடவடிக்கைகளோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான போர் பயிற்சி நிலையமாக அந்த இடம் பராமரிக்கப்படவில்லை.



எனினும், அந்த இடத்தில் சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்தமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது, அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

பளையில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் : காவல்துறை விசாரணைகளில் வெளியான தகவல் | Training Camp In Kilinochchi Police Investigation



இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் கைது செய்தனர்.



பின்னர் அவர் நேற்று (19) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கிளிநொச்சி பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் மற்றும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

ஜோகூர், திரெங்கானு கொடி குளறுபடிகளில் இரட்டை நிலைப்பாடுகளை சாடிய நாடாளுமன்ற உறுப்பினர் | Makkal Osai

Next Post

இரவு, பகலாக குளத்து நீரில் வாழ்ந்த மேற்கு வங்க சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி! நீரில் வாழ்வது ஏன்? | Anant Ambani gives hands to help the poor boy who live in water

Next Post
இரவு, பகலாக குளத்து நீரில் வாழ்ந்த மேற்கு வங்க சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி! நீரில் வாழ்வது ஏன்? | Anant Ambani gives hands to help the poor boy who live in water

இரவு, பகலாக குளத்து நீரில் வாழ்ந்த மேற்கு வங்க சிறுவனுக்கு ஆனந்த் அம்பானி உதவி! நீரில் வாழ்வது ஏன்? | Anant Ambani gives hands to help the poor boy who live in water

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin