2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து, இந்தியாவில் தங்கத்தின் விலை 5 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தது. தங்கம் விலை குறைந்ததால், புதிதாக தங்கம் வாங்குவோர் பயன் அடைந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவிப்பால் தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு ஒரே நாளில் ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவுடன் ஒப்பிடும்போது ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு என்பது இதுவரை பதிவு செய்யப்பட்ட சரிவுகளில் 6வது பெரிய இழப்பாகும். பங்குகளில் ஏற்பட்ட சரிவு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்களுக்கு மட்டுமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், தங்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவு நாட்டின் இருக்கும் அனைத்து தரப்பு மக்களையும் பாதிப்படையச் செய்துள்ளது. ஏனெனில், இந்தியாவில் குண்டுமணி அளவு கூட தங்கம் வைத்திருக்காத குடும்பங்கள் மிகவும் குறைவு.
உலகின் மொத்த தங்க இருப்பில் 11 சதவீதத்தை இந்திய குடும்பங்கள் வைத்துள்ளன. இது அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய பெரிய வளர்ந்த நாடுகளை விட மிக அதிகம். இந்நிலையில், பட்ஜெட்டால் ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது எப்படி?
இதையும் படிங்க:
12 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? – இணையத்தில் வைரலாகும் பில்!
ஜூலை 22ஆம் தேதி 1 கிராம் தங்கம் ரூ.6,825. பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தில் விலை ரூ.6,550 ஆக குறைந்தது. இப்படிப்பட்ட சூழலில் உலகின் மொத்த தங்க இருப்பில் 11 சதவீதத்தை இந்திய குடும்பங்கள் வைத்துள்ளன. அதன் அடிப்படையில் சுமார் 30,000 டன் தங்கம் இந்தியாவில் இருக்கிறது. இதன் அடிப்படையில், 30,000 டன் தங்கம் ஜூலை 22ஆம் தேதி 205 லட்சம் கோடி ரூபாய். ஜூலை 23ஆம் தேதி பட்ஜெட் அறிவிப்புக்கு பின்பு, 194 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதன்மூலம் மக்கள் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு ஒரே நாளில் 10.74 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
