• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பல்வேறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு நிதி கல்வியறிவுக்கான வழிகாட்டி.. முழு விவரம் இதோ! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 19, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
பல்வேறு வயதில் உள்ள குழந்தைகளுக்கு நிதி கல்வியறிவுக்கான வழிகாட்டி.. முழு விவரம் இதோ! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 19, 2025 7:46 AM IST

செலவுகளைக் கண்காணிப்பது அல்லது வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கான செயலிகள் போன்ற நிஜ கருவிகளைப் பயன்படுத்துவதில் டீனேஜர்களை பழக்கப்படுத்த வேண்டும்.

News18
News18

நிதி சார்ந்த கல்வியறிவு பெரியவர்களுக்கு மட்டுமானதல்ல; இது இளம் வயதிலிருந்தே தொடங்கி வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொடுக்கப்பட வேண்டிய திறமையாகும். குழந்தையின் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப பாடங்களை வடிவமைப்பதன் மூலம், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் பாதுகாப்பையும் வளர்க்கும் ஆரோக்கியமான பணப் பழக்கங்களை வளர்க்கலாம். குழந்தைகளுக்கான வயதுக்கு ஏற்ற விளக்கம் இதோ. இந்த அணுகுமுறைகள் குழந்தைகளை புத்திசாலித்தனமாக பணத்தை செலவிட அனுமதிக்கின்றன. அதுப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பாலர் வயது (3-5 வயது)

இந்தக் கட்டத்தில், புலன் அனுபவங்கள் மூலம் பணத்தை உறுதியானதாகவும் வேடிக்கையாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் போலியான விருந்து கொண்டாட்டங்களுக்கு “பணம்” செலுத்துவது போல் விளையாட்டு நேரத்தில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். இந்த எளிய பரிமாற்றம் மூலம் பொருட்களையும் சேவைகளையும் பணத்தால் பெற முடியும் என்பதை கற்பித்து இளம் மனங்களில் அடித்தளத்தை அமைக்கிறது.

பள்ளி பருவம் (6-10 வயது)

அடிப்படை பகுத்தறிவு திறன் கொண்ட இந்த வயது குழந்தைகளால், சேமிப்பு, திட்டமிடல் மற்றும் தங்களது தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்ள முடியும். பொம்மை வாங்குவதற்காகச் சேமிப்பது அல்லது திடீர் செலவுகள் போன்றவற்றை ஊக்குவிக்க வாரம்தோறும் சிறிது பணம் வழங்குங்கள்.

வழக்கமான வேலைகளை நடைமுறைப் பாடங்களுக்குப் பயன்படுத்துங்கள். மளிகைப் பொருட்களை வாங்கும்போது, ​​விலை ஒப்பீடு செய்வது அல்லது சலுகைகளைக் கண்டறிவதில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். இது அவர்களிடம் பட்ஜெட் உள்ளுணர்வை இயல்பாகவே உருவாக்குகிறது.

வளர் இளம் பருவம் (11-13 வயது)

பதின்ம வயதுக்கு முந்தைய குழந்தைகள் இலக்கு நிர்ணயம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். புதிய புத்தகம் அல்லது பைக் போன்ற தனிப்பட்ட இலக்குகளுக்காக சேமிக்க அவர்களை வழிநடத்துங்கள். அதே நேரத்தில் முயற்சி செய்தால் வருவாய் ஈட்டலாம் என்பதை சொல்லுங்கள். இது சம்பாதித்த பணத்தின் மதிப்பை வலுப்படுத்துகிறது மற்றும் ஒழுக்கமான சேமிப்பை ஊக்குவிக்கிறது.

டீனேஜர்கள் (14-18 வயது)

செலவுகளைக் கண்காணிப்பது அல்லது வங்கியில் அடிப்படை சேமிப்புக் கணக்குகளைத் திறப்பதற்கான செயலிகள் போன்ற நிஜ கருவிகளைப் பயன்படுத்துவதில் டீனேஜர்களை பழக்கப்படுத்த வேண்டும். டிஜிட்டல் பேமெண்ட், சேமிப்புக் கணக்குகள், வட்டி மற்றும் கடனின் பொறுப்பான பயன்பாடு போன்றவற்றை அவர்களிடம் பேசுங்கள். அவர்களின் வருமானம் மற்றும் செலவுகளை கண்காணிக்க ஊக்குவிப்பது ஆரம்பத்திலேயே பட்ஜெட் மற்றும் கடன் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது.

இளம் வயது வந்தோர் (18+ வயது)

வயதுக்கு வந்த இளைஞர்களுக்கு 50/30/20 விதியின் மூலம் பட்ஜெட் செய்தல் (50% தேவைகள், 30% விருப்பங்கள், 20% சேமிப்பு), அவசர நிதிகள் மற்றும் பரஸ்பர நிதிகள் அல்லது கூட்டுத்தொகை போன்ற முதலீட்டு அடிப்படைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். கடனில் சிக்குவதை தவிர்க்க கிரெடிட் ஸ்கோர், கடன் விதிமுறைகள், வரிகள் மற்றும் மோசடி தடுப்பு ஆகியவற்றை கற்றுக் கொடுங்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 19, 2025 7:46 AM IST

Read More

Previous Post

Top 10 Tamil News | பொங்கல் ரயில் டிக்கெட் இன்று முன்பதிவு தொடக்கம்.. இன்றைய டாப் 10 செய்திகள் | இந்தியா

Next Post

கிரிமினல் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல் | 200 people including criminal Anmol Bishnoi deported from US to India

Next Post
கிரிமினல் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல் | 200 people including criminal Anmol Bishnoi deported from US to India

கிரிமினல் அன்மோல் பிஷ்னோய் உட்பட 200 பேர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தல் | 200 people including criminal Anmol Bishnoi deported from US to India

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin