இத்துடன், நாகோன் மற்றும் கச்சார் ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து தற்போது 2 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம், அம்மாநிலத்தில் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் சுமார் 41,000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 190 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள பல்வேறு முக்கிய சாலைகள், பாலங்கள், கல்வி நிறுவனங்கள், மின்சார அமைப்புகள், ரயில் சேவைகள் ஆகியவை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் வழங்கும் பணியில் நூற்றுக்கணக்கான மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: ஆர்சிபி பேரணி கூட்ட நெரிசல்: பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்!

