விமானத்தில் தான் பார்த்த அருவருப்பான விஷயங்கள் குறித்து விமானப் பணிப்பெண் ஒருவர் ரெடிட் என்ற தளத்தில் தகவல்களை பகிர்ந்துள்ளார். அவை வியப்பை ஏற்படுத்தி வருகின்றன.
முன்பெல்லாம் விமானத்தில் செல்வது என்பது மிகவும் அரிதான, உயர்ந்த ஆசைகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்காலத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் போக்குவரத்து துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் இன்று சாமானிய நபர்களும் விமானத்தில் பயணம் செய்து வருகின்றனர். விமான பயணம் குறித்து சாதாரண பயணிகளுக்கு மேலோட்டமாகத் தான் தெரிந்திருக்கும்.
ஆனால் அதில் வேலை பார்க்கும் பணியாளர்கள் தான் விமானத்திற்குள் என்னென்ன நடக்கும், எந்தெந்த விஐபிகள் வருவார்கள், ஒவ்வொரு நிறுவனங்களின் விமானங்கள் எப்படி இருக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த வகையில் ரெடிட் என்ற தளத்தில் 25 ஆண்டுகள் அமெரிக்க விமான நிறுவனத்தில் பணியாற்றிய பணிப்பெண் ஒருவர், தன்னிடம் எந்த கேள்வியையும் கேட்கலாம் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க:
ஜப்பானில் தென்னிந்திய உணவகம்… அதுவும் ஜப்பானியர்களே நடத்தும் ஆச்சரியம்.. முதல்வரின் ஆலோசகர் பதிவு
அதற்கு ஒருவர் விமானத்தில் நீங்கள் பார்த்த அருவருப்பான விஷயங்கள் என்ன என்று கேள்வி கேட்டார். இதற்கு அந்த பணிப்பெண் கூறியதாவது-
விமானத்திற்குள் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் அணியக்கூடிய மிக மோசமான உள்ளாடைகள், இன்னும் வெளியே சொல்ல முடியாத பொருட்கள் ஆகியவற்றை விமான கழிவறைகளில் அதற்கு அருகே உள்ள இடங்களில் பார்த்திருக்கிறேன். அப்படியென்றால் அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கயே யூகம் செய்து கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நகரத்திற்கு நீங்கள் பயணம் செய்யும்போதும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவங்களை உணர முடியும். விமான பணிப்பெண் என்பது ஒரு சுவாரசியமான பணி. இதில் பயண பலன்கள், பண பலன்கள், உடல் நல பாதுகாப்பு அம்சங்கள், உலகின் பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு, ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வித்தியாசமான அனுபவம் உள்ளிட்டவை கிடைக்கும்.
ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் உறவுகளை பேணுவதில் சிரமம் ஏற்படும். விடுமுறைகள் நமக்கு கிடைக்காது. குடும்பத்தில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களை அடிக்கடி பார்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…