தற்போது ஆன்லைனில் பர்சனல் லோன்களுக்கு விண்ணப்பிப்பது அதன் சௌகரியத்தாலும் எளிதில் கிடைக்கக்கூடிய தன்மையினாலும் அதிக அளவில் பிரபலமடைந்து வருகிறது. அதனை படிப்படியாக செய்வதற்கான வழிமுறைகளை இப்பொழுது பார்க்கலாம்.
கடன் வழங்குனர்களை மதிப்பாய்வு செய்யவும்
கடன் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக இருக்கக்கூடிய பல்வேறு கடன் வழங்குனர்கள் கொடுக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் விதிகளை ஒரு முறை ஆய்வு செய்யுங்கள். வட்டி விகிதங்கள், திருப்பி செலுத்துவதற்கான கால அளவு, கட்டணங்கள், தகுதி வரம்பு மற்றும் கஸ்டமர் ரிவ்யூக்கள் போன்றவற்றை நீங்கள் கவனிக்க வேண்டும்.
தகுதி வரம்பை சரிபார்க்கவும்
ஒரு குறிப்பிட்ட கடன் வழங்குனரை நீங்கள் தேர்வு செய்த பிறகு அந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் வாங்குவதற்கான தகுதி வரம்பு என்ன என்பதை முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள். கிரெடிட் ஸ்கோர், வருமானம், வேலை மற்றும் வசிக்கும் இடம் போன்ற பல்வேறு விஷயங்கள் இதில் அடங்கும்.
டாக்குமெண்ட்களை தயாராக வைக்கவும்
அடையாள சான்றிதழ், முகவரி சான்றிதழ், வருமான சான்றிதழ் (சேலரி ஸ்லிப் அல்லது வங்கி ஸ்டேட்மெண்டுகள், வருமான வரி தாக்கல்கள் மற்றும் பிற பொருளாதார டாக்குமெண்ட்கள் போன்றவற்றை தயாராக வையுங்கள்.
விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்
அனைத்து டாக்குமெண்ட்டுகளையும் தயாராக வைத்ததும் கடன் வழங்குனரின் வெப்சைட்டுக்கு சென்று ஆன்லைன் படிவத்தை நிரப்புவதற்கு அப்ளிகேஷன் லிங்கை கிளிக் செய்யவும். உங்களுடைய பெயர், முகவரி, பிறந்த தேதி, சோஷியல் செக்யூரிட்டி நம்பர், எம்ப்ளாய்மெண்ட் விபரங்கள், வருமானம் மற்றும் நீங்கள் கடன் வாங்க நினைக்கும் தொகை போன்ற விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும். மேலும் உங்களுடைய பொருளாதார நிலை குறித்த ஒரு சில தகவல்களையும் நீங்கள் வழங்க வேண்டும்.
லோன் கால அளவை தேர்வு செய்யவும்
லோன் தொகை மற்றும் அதனை திருப்பி செலுத்துவதற்கான காலம் ஆகிய இரண்டையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யுங்கள். திருப்பி செலுத்தும் காலத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நீட்டித்துக் கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக நீங்கள் வட்டி செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைக்கவும்.
இதையும் படிங்க:
கர்ப்பிணிகளுக்கு ரூ.11,000… மத்திய அரசின் இந்த திட்டம் உங்களுக்கு தெரியுமா?
ஆய்வு செய்து சமர்ப்பிக்கவும்
நீங்கள் வழங்கிய விவரங்களை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து, கடன் வாங்குவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக படித்த பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். நீங்கள் வழங்கிய விவரங்கள் சரிதானா என்பதை நிரூபிப்பதற்கு நீங்கள் ஒரு சில டாக்குமெண்ட்களையும் அப்லோட் செய்ய வேண்டி இருக்கலாம்.
கடன் அங்கீகாரத்திற்கு காத்திருக்கவும்
உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் சமர்ப்பித்த பிறகு நீங்கள் வழங்கிய விபரங்களை ஆய்வு செய்து உங்களுக்கு கடன் வழங்கலாமா வேண்டாமா என்ற முடிவை கடன் வழங்குனர்கள் எடுப்பார்கள். இந்த செயல்முறை முடிவடைவதற்கு ஒரு சில நிமிடங்கள் முதல் ஒரு சில நாட்கள் வரை ஆகலாம். இது கடன் வழங்குநரை பொறுத்து அமையும்.
அங்கீகாரம் மற்றும் நிபந்தனைகளை பெறவும்
உங்களுடைய லோன் அப்ரூவல் ஆகிவிட்ட நிலையில் உங்களுக்கு லோன் விதிகள் அதாவது வட்டி விகிதம், திருப்பி செலுத்துவதற்கான அட்டவணை மற்றும் ஏதேனும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் ஆகிய விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆஃபரை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு விதிகளை கவனமாக படித்து பார்க்கவும்.
கடனை ஏற்கவும்
விதிகள் உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் லோன் ஆஃபரை நீங்கள் எலக்ட்ரானிக் முறைப்படி ஏற்று, லோன் செயல் முறையை நிறைவு செய்ய கையெழுத்திட்டு அனுப்பலாம்.
Follow @ WhatsApp :
வாட்ஸ் அப் -ல்
நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற
இங்கே
கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பணத்தை பெறவும்
லோன் ஆஃபரை நீங்கள் ஏற்றுக் கொண்ட பிறகு உங்களுடைய வங்கி கணக்கிற்கு உங்களுக்கான கடன் தொகை ஒரு சில வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)