Last Updated:
நீங்கள் கடன் வாங்க நினைக்கும் கடன் வழங்குனர் RBIல் அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை நீங்கள் முதலில் சரி பார்க்க வேண்டும்.
இந்தியாவின் டிஜிட்டல் கடன் வழங்கும் முறை மூலமாக பர்சனல் லோன்கள் விரைவாகவும், அதே நேரத்தில் எளிமையான விதத்திலும் பலருடைய பணத் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனாலும் இந்த சௌகரியமானது ரிஸ்க் இல்லாமல் கிடைக்குமா? மோசடிக்காரர்கள் விரைவான லோன்களை தேடும் மக்கள், போலியான அப்ளிகேஷன்கள், மெசேஜ்கள் மற்றும் நம்ப முடியாத சலுகைகளை வழங்குவதன் மூலமாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். வங்கிகள் மற்றும் NBFCகள் இது மாதிரியான மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்து வருகின்றனர். பொதுவான சில கடன் மோசடிகள் மற்றும் அதனை தடுப்பதற்கான வழிகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நம்பவே முடியாத அளவிற்கு குறைவான வட்டி விகிதங்கள், குறைந்தபட்ச ஆவணங்கள் அல்லது உறுதியளிக்கப்பட்ட அப்ரூவல் போன்றவை பெரும்பாலும் மோசடிகளாக இருக்கக்கூடும். அடிப்படை பரிசோதனைகள் இல்லாமல் உண்மையான கடன் வழங்குனர்கள் பணத்தை அங்கீகரிக்க மாட்டார்கள். ஒரு சலுகை நம்பவே முடியாத அளவிற்கு நல்லதாக இருந்தால் கட்டாயமாக அதிலிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நம்பகமான வங்கிகள் மற்றும் NBFCகள் வாடிக்கையாளர்களிடம் லோன் தொகையை கொடுப்பதற்கு முன்பு முன்பணம் கேட்பது வழக்கம் கிடையாது. ப்ராசஸிங் செய்வதற்கான கட்டணங்கள் என்பது எப்பொழுதும் லோன் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படுமே தவிர அது முன் பணமாக வசூலிக்கப்படாது. ஆகையால் உங்களிடம் முன்பணம், இன்சூரன்ஸ் கட்டணம் அல்லது சரிபார்ப்பு கட்டணம் கேட்கும் நிறுவனங்களிடமிருந்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நீங்கள் கடன் வாங்க நினைக்கும் கடன் வழங்குனர் RBIல் அங்கீகரிக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனமா என்பதை நீங்கள் முதலில் சரி பார்க்க வேண்டும். ஒருவேளை RBI டேட்டாபேஸில் அந்த நிறுவனத்தின் பெயர் இல்லாத பட்சத்தில் அந்நிறுவனத்திடம் இருந்து கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
மோசடிக்காரர்கள் ஆதார், PAN கார்டு, பேங்க் பாஸ்வேர்ட் அல்லது OTPகளை போன் கால் அல்லது சேட்டுகள் மூலமாக கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பல போலியான கடன் வழங்கும் அப்ளிகேஷன்கள் உங்களுடைய போனின் காண்டாக்ட், மெசேஜ்கள், போட்டோக்கள் மற்றும் லொகேஷனுக்கான அணுகலையும் கேட்கின்றனர். இது நிச்சயமாக பொருளாதார மோசடி அடையாளத் திருட்டுக்கு வழிவகுக்கலாம்.
“இன்று விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி”, “இப்போது பணம் செலுத்தாவிட்டால் உங்களுடைய கடன் ரத்து செய்யப்படும்” அல்லது “குறைவான ஸ்லாட்டுகள் மட்டுமே உள்ளது” என்பது போன்ற உங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் மெசேஜ்களை நீங்கள் நம்ப கூடாது. நம்பகமான கடன் வழங்குனர்கள் விதிகள் மற்றும் நிபந்தனைகளை படிப்பதற்கு பல்வேறு ஆப்ஷன்களை ஒப்பிட்டு பார்ப்பதற்கு மற்றும் முடிவுகள் எடுப்பதற்கு போதுமான நேரத்தை வழங்குவார்கள். எனவே எந்த ஒரு விஷயத்தையும் அவசரத்தில் செய்ய வேண்டாம்.
November 18, 2025 2:03 PM IST


