பலர் வாங்கிய கடன்களை சரிவர செலுத்தாமல் இருக்கும் காரணத்தினால் 2025ல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளை இன்னும் கடினமாக்கி உள்ளனர். எனவே, உங்களுடைய விண்ணப்பம் எந்தெந்த காரணத்திற்காக நிராகரிக்கப்படலாம் என்பது குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
மோசமான அல்லது குறைவான கிரெடிட் ரேட்டிங்:
குறைவான கிரெடிட் ரேட்டிங் இருப்பது உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக இருக்கலாம். பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பர்சனல் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கு 750க்கும் அதிகமான கிரெடிட் ரேட்டிங்கை எதிர்பார்க்கின்றன.
போதுமான அல்லது நிலையாக இல்லாத வருமானம்:
உங்களுடைய வருமானம் மற்றும் வேலையின் நிலைத்தன்மையைப் பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் உங்களுடைய திறனை கடன் வழங்குனர்கள் மதிப்பீடு செய்வார்கள். ஒருவேளை உங்களுடைய வருமானம் கடன் வழங்குனர் விதித்துள்ள குறைந்தபட்ச உச்சவரம்பை பூர்த்தி செய்யாவிட்டாலோ அல்லது சமீபத்தில் நீங்கள் பல வேலைகளில் மாற்றமாகி இருந்தாலோ அல்லது வழக்கமான வருமானம் இல்லாத ஃப்ரீலான்ஸ் வேலை செய்துவந்தாலோ உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
ஏற்கனவே இருக்கும் அதிக கடன் சுமை:
ஒருவேளை ஏற்கனவே நீங்கள் கடன் வாங்கி அதற்கான EMIகளை செலுத்தி வந்தாலோ அல்லது கிரெடிட் கார்டு பில்கள் உங்களுடைய வருமானத்தில் 40 சதவீதத்திலிருந்து 50% பணத்தை எடுத்து வந்தாலோ கட்டாயமாக உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
சரியான ஆவணங்கள் சமர்ப்பிக்காதது:
பூர்த்தி அடையாத KYC ஆவணங்களோடு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது, வெவ்வேறு கையெழுத்துக்கள் அல்லது காலாவதியான வருமான சான்றிதழ்கள் போன்றவற்றின் காரணமாக உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. எனவே, எப்பொழுதும் உங்களுடைய PAN, ஆதார் மற்றும் வருமான ஸ்டேட்மெண்டுகள் ஆகியவை சரியான முறையில் அப்லோட் செய்யப்பட்டு இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
பல்வேறு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் நீங்கள் அளவுக்கு அதிகமாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருந்தால் அதன் விளைவாக செய்யப்பட்ட ஹார்ட் என்கொயரி காரணமாக உங்களுடைய விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதன் மூலமாக நீங்கள் அதிக கடன் வாங்குவீர்கள் என்பது நிரூபிக்கப்படுவதால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்களுக்கு கடன் வழங்குவதற்கு தயங்குவார்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
அடிக்கடி கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பதால் அது குறையுமா?
இல்லை, கிரெடிட் ஸ்கோரை நீங்கள் சரிபார்ப்பதால் உங்களுடைய ஸ்கோருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால், ஒரு குறுகிய காலகட்டத்தில் பல்வேறு கடன் வழங்குனர்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பது நிச்சயமாக அதனை குறைக்கலாம்.
ஒருமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பிறகு மீண்டும் விண்ணப்பிப்பதற்கு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?
நீங்கள் இதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 6 மாதங்கள் வரை காத்திருக்கலாம். உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை கவனியுங்கள், பிரச்சனைகளை சரிசெய்யுங்கள், மீண்டும் விண்ணப்பிப்பதற்கு முன்பு உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள்.
ஒரு சில NBFCகள் குறைவான ஸ்கோர் கொண்ட நபர்களுக்கும் கடன் வழங்கி வருகின்றன. ஆனால், இந்த கடனானது அதிக வட்டி விகிதங்களில் வழங்கப்படுகிறது. மேலும், இது தவிர ஏதாவது ஒரு சொத்து அல்லது நகை போன்றவற்றை அடமானமாக கொண்டு செக்யூர்டு லோனை வாங்கலாம்.
July 21, 2025 5:46 PM IST

