Last Updated:
Personal loan tips | 2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பர்சனல் லோன் வளர்ச்சி 6% குறைந்தது. கடன் பெறுநர்கள் எச்சரிக்கையுடன் கடனை கையாளுகின்றனர்.
2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டு பர்சனல் லோன் வளர்ச்சியானது 6 சதவீதம் குறைந்துள்ளது. அதன்படி, கடன் பெறுநர்கள் தங்களுடைய கடனை எச்சரிக்கையுடன் கையாண்டு வருவது சமீபத்திய ஆய்வு மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலர் தங்களுக்கு இருக்கக்கூடிய கடன்களை விரைவாக செலுத்தி, குறைவான வட்டி விகிதம் கொண்ட கடன்களை நாடுவதன் மூலமாகவும், தங்களுடைய பொருளாதார அழுத்தத்தை குறைத்து வருகின்றனர். கடன் பெறுனர்களுக்கு உதவுவதற்காக இந்த பதிவில் ஒரு பர்சனல் லோனை விரைவாக எப்படி மூடலாம் என்பதற்கான சிறந்த வழிகளை பார்க்கலாம்.
ஒரு வாரத்திற்கு இரண்டு முறை பேமெண்டுகளை செலுத்துவதன் மூலமாக கூடுதல் பேமெண்ட்களை ஒவ்வொரு வருடமும் செலுத்தி உங்களுடைய கடனை நீங்கள் விரைவாக அடைக்கலாம். உதாரணமாக ஒவ்வொரு மாதத்திலும் 2000 ரூபாய் கூடுதலாக செலுத்துவதால் உங்களுடைய மொத்த வட்டி தொகை மற்றும் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் குறையும்.
கிடைக்கக்கூடிய போனஸ், டேக்ஸ் ரீஃபண்ட் போன்ற கூடுதல் பணம் உங்களுக்கு கிடைக்கும் போது அதனை நேரடியாக கடனின் முதல் தொகையில் செலுத்தலாம். ஆனால் அதனை செய்வதற்கு முன்பு உங்களுடைய கடன் வழங்குனரின் ப்ரீ-பேமெண்ட் சம்பந்தப்பட்ட பாலிசிகளை நீங்கள் சரி பார்க்க வேண்டும். ஒரு சில கடன் வழங்குனர்கள் இதற்கு கட்டணங்களை வசூலிக்கலாம். எனவே நீங்கள் சேமிக்க கூடிய வட்டி அந்த கட்டணங்களை விட அதிகமாக இருக்கக்கூடாது. ஆகையால், உங்களுடைய கடன் சம்பந்தமான விதிகள் மற்றும் நிபந்தனைகளை தெளிவாக புரிந்து கொண்டு தகுந்த முடிவை எடுக்கவும்.
ஏற்கனவே இருக்கும் கடனின் வட்டி விகிதத்தை விட குறைவான வட்டி விகிதத்திற்கு மீண்டும் கடன் வாங்கி முதல் கடனை செலுத்தலாம் அல்லது உங்களுடைய பேலன்ஸை குறைவான வட்டி வழங்கும் வங்கிக்கு டிரான்ஸ்ஃபர் செய்யலாம். இது ஒட்டுமொத்த வட்டி தொகையை குறைக்கும். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் இந்த மொத்த பிரச்சனை குறித்து அங்கீகாரம் பெற்ற பொருளாதார ஆலோசகரை நீங்கள் சந்திக்கலாம்.
அதிக வட்டி கொண்ட கடன்கள் அனைத்தையும் குறைவான வட்டிக் கொண்ட ஒரே ஒரு கடனாக நீங்கள் மாற்றலாம். இது உங்களுடைய பர்சனல் லோனை குறைப்பதற்கு உதவும். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், டைனிங் போன்ற அத்தியாவசியமற்ற செலவுகளை முடிந்த அளவு குறைத்துக் கொள்ளுங்கள்.
ஃப்ரீலான்சிங், ஆன்லைன் வகுப்புகள் போன்றவை மூலமாக கூடுதல் வருமானங்கள் பெற்று, உங்களுடைய கடனை விரைவாக அடைக்க முயற்சி செய்யுங்கள். மேலும் EMI தொகையை ஆட்டோமேட் செய்வதன் மூலமாக தாமதமாக பேமெண்ட் செலுத்துவதற்கான கட்டணங்களை நீங்கள் தவிர்க்கலாம்.
கடன் அக்கவுண்டுகளை விரைவாக மூடுவதற்கு பொருளாதார ஆலோசகர்களின் வழிகாட்டுதலை நீங்கள் நாடலாம். இது உங்களுடைய வட்டி சுமையை குறைத்து, பொருளாதார அழுத்தத்தை தளர்த்த உதவும்.
July 03, 2025 5:38 PM IST