• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் அஜர்பைஜானில் கவனம் ஈர்க்கும் ‘இறந்த திமிங்கல மாதிரி’ | Whale model in Baku shines spotlight on climate change issues

GenevaTimes by GenevaTimes
November 13, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
பருவநிலை உச்சி மாநாடு நடைபெறும் அஜர்பைஜானில் கவனம் ஈர்க்கும் ‘இறந்த திமிங்கல மாதிரி’ | Whale model in Baku shines spotlight on climate change issues
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலக தலைவர்கள் பங்கேற்கும், 2 நாள் பருவநிலை நடவடிக்கை உச்சி மாநாடு (சிஓபி29 – COP29) அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நவம்பர் 11 தொடங்கி வரும் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் பாகு கடற்கரையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ‘இறந்த திமிங்கல மாதிரி’ கவனம் பெற்றுள்ளது. காயங்களில் இறந்து ரத்தம் வழிந்து உறைந்து திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பது போல் மிகத் தத்ரூபமாக இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேப்டன் பூமர் என்பவர் உருவாக்கியுள்ள இந்த திமிங்கல மாதிரி பருவநிலை மாற்றம் திமிங்கல வகை மீன்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூடவே பருவநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திமிங்கல மாதிரியைக் காண பாகு நகரவாசிகள் கூட்டம் கூட்டமாகக் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர்.

இதற்கு முன்னதாக இந்த திமிங்கல மாதிரியானது பாரிஸ், ஜூரிச் மற்றும் போர்டோக்ஸிலும் காட்சிப்படுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மாநாட்டின் பிரதான இலக்கு: பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்​புக்கான இழப்பீட்டு நிதியில் கார்பன் உமிழ்வில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்தியா, சீனா, வளைகுடா நாடுகள் பங்களிக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் வலியுறுத்​தி வருகின்றன. தவிர, இழப்பீடு நிதியை வழங்கு​வதில் வளர்ந்த – வளரும் நாடுகளுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்​படாமல் உள்ளது. இவை குறித்து COP29 மாநாட்டில் விவாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2-ம் பகுதியில் பங்கேற்கும் இந்தியா: இந்த மாநாட்டின் முதல் பகுதியில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்களுக்கு அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் அழைப்பு விடுத்திருந்தார். இதில் 82 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த மாநாட்டின் முதல் பகுதியில் இந்தியா பங்கேற்கவில்லை.

இந்த மாநாட்டின் 2-ம் பகுதி வரும் 19, 20ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் தலைமையில் 19 உறுப்பினர்கள் கொண்ட குழு பங்கேற்க உள்ளது.



Read More

Previous Post

இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி

Next Post

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.40 ஆக வரலாறு காணாத சரிவு! | Makkal Osai

Next Post
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.40 ஆக வரலாறு காணாத சரிவு! | Makkal Osai

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.84.40 ஆக வரலாறு காணாத சரிவு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin