இதை கருத்தில் கொண்டு, சரசாரி மகசூல் அளவை ஹெக்டேருக்கு 881 கிலோவிலிருந்து 1130 கிலோவாக உயா்த்துதல், குறுகியகால , பூச்சித்தாக்குதல் எதிா்ப்புத்திறன் கொண்ட, காலநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய உயா் விளைச்சல் ரகங்களை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல், பயறுவகை சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய அம்சங்களைக் கொண்டு பயறுவகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
