ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருக்கக்கூடிய வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புதுப் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் பயனர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப் குழுக்களில் புதிதாக சேருபவர்கள், தாங்கள் இணைவதற்கு முன்பு பகிரப்பட்ட முந்தைய செய்திகளை பார்க்கும் புதிய வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் குழுவில் சேரும் புதிய நபர் கடந்த 24 மணி நேரத்தில் பகிரப்பட்ட 25 முதல் 100 செய்திகள் வரை பார்க்க முடியும்.
