அதிகரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கையை நிர்வகிக்கவும், நடைமேடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், புது டெல்லி ரயில் நிலையத்தில் ஒரு தங்குமிட பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை குறைக்கவும், ஏறும்போதும், இறங்கும்போதும் ஏற்படும் குழப்பத்தைக் குறைக்கவும் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளது. பாந்த்ரா டெர்மினஸ், சூரத் மற்றும் உத்னா உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும் இதேபோன்ற பயணிகள் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ரயிலில் பயணிக்கும்போது சில பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று ரயில்வே அமைச்சகம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. சமூக ஊடக அறிவிப்பில், பட்டாசுகள் அல்லது எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்குமாறு பயணிகளுக்கு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பட்டாசுகள்
மண்ணெண்ணெய்
எரிவாயு சிலிண்டர்கள்
அடுப்புகள்
தீப்பெட்டிகள்
சிகரெட்டுகள்
இந்தப் பொருட்கள் ஆபத்தானவை என்றும், அவற்றால் ரயிலில் தீ விபத்து ஏற்படக்கூடும் என்பதால் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயணம் வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க, சில பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுமாறு இந்திய ரயில்வே பயணிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்பதை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கிடமான பொருள், நபர் அல்லது நடவடிக்கை ஏதேனும் காணப்பட்டால், அருகிலுள்ள RPF, GRP அல்லது நிலைய ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
1. பயணிகளுக்கான கூடுதல் பாதுகாப்பு உதவிக் குறிப்புகளையும் RPF பகிர்ந்து கொண்டது.
2. தனிப்பட்ட பொருட்களை எப்போதும் பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளுங்கள்.
3. அதிக அளவு பணத்தை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்; முடிந்தவரை டிஜிட்டல் கட்டணங்களைப் பயன்படுத்தவும்.
4. குழந்தைகள் எப்போதும் பெரியவர்களுக்கு அருகில் இருக்க வேண்டும்.
5. ரயில்வே அறிவிப்புகளை கவனமாகக் கேட்டு, ஊழியர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
October 19, 2025 4:33 PM IST