நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட யாழ். நகரைச் சேர்ந்த ஒருவர் நேற்று அதிகாலை விமானத்துக்குள் ஏறிய பின்னர் விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவர் தனது கடவுச்சீட்டின் சுயவிபரக்கோவை பக்கத்திலுள்ள தரவுகளை மாற்றி போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி, மலேசியாவுக்கு தப்பிச்செல்ல விமானத்தில் ஏறி அமர்ந்திருந்த போதே, கைது செய்யப்பட்டார். யாழ். சண்டிலிப்பாயில் வசிக்கும் 34 வயதுடையவரே இவ்வாறு கைதானார்.
2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற குற்றச்சாட்டில் அவர் கைதானதையடுத்து, அவருக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்கு தொடர்பில் நாட்டை விட்டு வெளியேற நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.
The post பயணத்தடை விதிக்கப்பட்டிருந்த யாழ். வாசி விமானத்துக்குள் கைது appeared first on Thinakaran.

