
சண்முகம் தவசீலன்
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன் முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் விசாரணைக்காக சென்றுள்ளார்
ஊடகவியலாளர் குமணனின் வீட்டுக்கு க 2025.08.07 அன்று சென்ற பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், அளம்பில் பொலிஸ் நிலையத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு 2025.08.17 அன்று வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர்

