
கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மெரைன் டிரைவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொலிஸார் வழங்கிய தகவலின்படி, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுடன் ஒரு பாரவூர்தி மோதியதே இந்த விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

