[ad_1]
கோலாலம்பூர்:
பபார் மாவட்டத்தில், உயிரிழந்த, 13 வயது சாரா கைரினா மகாதீர் (Zara Qairina Mahathir) மரணம் தொடர்பான வழக்கில், அவர், சலவை இயந்திரத்திற்குள், வைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என, தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெஸ்ஸி ஹியூ (Dr Jessie Hiu) கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
இறக்கும் தருவாயில் சாரா, 53 கிலோகிராம் எடையுடன் இருந்ததால், அவ்வளவு எடையுள்ள ஒருவரை, ஒரு சாதாரண சலவை இயந்திரத்தில் வைக்க முடியாது என்றும், அவ்வாறு வைக்க முற்பட்டால், இயந்திரம் இயங்காது என்றும், அவர் விளக்கினார்.
இதனிடையே, கடந்த ஜூலை 16-ஆம் தேதி, பள்ளி விடுதிக்கு அருகிலுள்ள, ஒரு வடிகாலில், சாரா, சுயநினைவின்றி கண்டுபிடிக்கப்பட்டார். பின்னர், ராணி எலிசபெத் மருத்துவமனையில், அவர் உயிரிழந்தார்.
இந்த மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய, அட்டர்னி ஜெனரல் அலுவலகம், அவரது சடலத்தைப் பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. நீதிபதி அமீர் ஷா அமீர் ஹாசான் (Amir Shah Amir Hassan) முன்னிலையில், இந்த விசாரணை தொடர்கிறது.