மாநிலத்தில் நவீன, மூடிய பன்றி வளர்ப்பு முறையை முன்மொழிந்ததற்காக, DAP கட்சியைச் சேர்ந்த சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக அம்னோ பிரிவுத் தலைவர் ஜமால் யூனோஸ் தெரிவித்துள்ளார்.
சுங்கை பெசார் அம்னோவின் தலைவரான ஜமால், ஶ்ரீ கெம்பாங்கன் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கியின் இந்த முன்மொழிவு அரசியல் சர்ச்சையையும் கோபத்தையும் தூண்டியுள்ளது என்றார். மேலும், இது பொறுப்பற்ற ஒரு சமூக ஊடகப் பதிவிற்கும் வழிவகுத்தது.
இது சிலாங்கூர் சுல்தானை இலக்காகக் கொண்டது என்று நம்பப்படுகிறது என அவர் கூறினார். வோங் மற்றும் அவமதிக்கும் சமூக ஊடகப் பதிவில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சிலாங்கூர் உம்மோ சார்பாக நான் ஒரு புகார் அளிப்பேன். மாநிலத்தில் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்கள் மற்றும் அரச நிறுவனத்தை அவமதிப்பவர்கள் மீது சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சிலாங்கூர் அம்னோ அழைப்பு விடுக்கிறது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த வாரத் தொடக்கத்தில், வோங்கின் முன்மொழிவு அவமரியாதையானது என்று அவர் குறிப்பிட்டிருந்தார்; சிலாங்கூர் சுல்தானின் விருப்பங்களுக்கு இணங்க விரும்பவில்லை என்றால், அவர் சிலாங்கூரை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். மாநிலத்தில் உள்ள எந்தவொரு மாவட்டத்திலும் பன்றி வளர்ப்பு நடத்தப்படுவதற்குத் தாம் சம்மதிக்கவில்லை என்று சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா பிப்ரவரி மாதம் கூறியிருந்தார்.
அதன்பிறகு வோங் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் சுல்தானின் விருப்பங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.




