இந்நிலையில், இன்று (மே 29) மாலை பனாமாவின் இந்தியத் தூதர் சுமித் சேத் வழங்கிய விருந்தில், சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழுவினர், பனாமா வெளியுறவுத் துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் பேசிய பனாமா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜேவியர் மார்ட்டினேஸ் அசா வாஸ்குவெஸ், பயங்கரவாதத்துக்கு எதிரான தனது கருத்துகளை பகிரங்கமாகப் பகிர்ந்ததுடன் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
இந்த அனைத்துக் கட்சிக் குழுவில், ஷம்பாவி சௌதாரி (லோக் ஜனசக்தி கட்சி), சராஃபராஸ் அஹமது (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜி.எம். ஹரிஷ் பாலயாகி (தெலுங்கு தேசம்), சிவசேனையின் மல்லிகார்ஜுன் தேவ்தா மற்றும் மிலிண்ட் தியோரா, பாஜகவின் ஷஷாங் மணி திரிபாதி, தேஜஸ்வி சூரியா, புபனேஸ்வர் கலிதா மற்றும் அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் தரஞ்ஜித் சிங் சாந்து ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லியில் தொடரும் நடவடிக்கை! சட்டவிரோதமாக குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!

