• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பந்தை சேதப்படுத்தினாரா ரவிசந்திரன் அஷ்வின்..? டிஎன்பிஎல் நிர்வாகம் கொடுத்த எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
பந்தை சேதப்படுத்தினாரா ரவிசந்திரன் அஷ்வின்..? டிஎன்பிஎல் நிர்வாகம் கொடுத்த எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 17, 2025 12:35 PM IST

பந்தை சேதப்படுத்தியதாக அஷ்வின் மீது மதுரை அணி குற்றம்சாட்டிய நிலையில் டிஎன்பிஎல் நிர்வாகம்

அஷ்வின்அஷ்வின்
அஷ்வின்

திண்டுக்கல் டிராகன் அணியின் கேப்டன் அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டிய மதுரை அணி அதற்கான ஆதாரங்களை இன்று மாலைக்குள் வழங்கத் தவறினால் தடை விதிக்கப்படும் என்று டிஎன்பிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளது.

டிஎன்பிஎல் தொடரில் கடந்த 14 ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகள் மோதின. இதில், நடப்பு சாம்பியனான மதுரை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது அஸ்வின் உள்ளிட்ட திண்டுக்கல் அணி வீரர்கள் பயன்படுத்திய கைக்குட்டையில் ரசாயனம் இருந்ததாகவும், அதைக் கொண்டு பந்தை சேதப்படுத்தியதாகவும் மதுரை அணி குற்றஞ்சாட்டியது.

இதுபற்றி மதுரை அணி முறையாக புகார் அளிக்காத நிலையிலும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் விதமாக டிஎன்பிஎல் நிர்வாகம் விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரம் இருந்தால் இன்று மாலை 3 மணிக்குள் வழங்குமாறும் டிஎன்பிஎல் நிர்வாகம் கூறியுள்ளது.

திண்டுக்கல் அணியினர் பயன்படுத்திய கைக்குட்டை டிஎன்பிஎல் நிர்வாகத்தால் வழங்கப்பட்டவை என்றும் அவை இரண்டு அணிகளுக்கும் சமமாக வழங்கப்பட்டதாகவும் டிஎன்பிஎல் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. விதிகளின்படி போட்டி முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் மதுரை அணி புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் அணி பந்தை சேதப்படுத்தியதற்கான ஆதாரங்களை வழங்கத் தவறினால் விதிகளின்படி மதுரை அணிக்கு தடை விதிக்கப்படும் என்றும் டிஎன்பிஎல் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 17, 2025 12:35 PM IST

Read More

Previous Post

சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்! கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

Next Post

தங்கம் விலை மீண்டும் சரிவு – பவுனுக்கு ரூ.840 குறைவு! | Gold prices fall again

Next Post
தங்கம் விலை மீண்டும் சரிவு – பவுனுக்கு ரூ.840 குறைவு! | Gold prices fall again

தங்கம் விலை மீண்டும் சரிவு - பவுனுக்கு ரூ.840 குறைவு! | Gold prices fall again

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin