Last Updated:
உத்தராகண்ட் பத்ரிநாத் அருகே பனிப்பாறை வெடித்ததில் 55 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். 16 பேர் மீட்கப்பட்டனர், மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பனிப்பாறை வெடித்த விபத்தில் 57 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர்.
உத்தராகண்டில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில், மனாவில் இருந்து காஸ்டோலியை இணைக்கும் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக பனிப்பாறை வெடித்து கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், பனியில் சிக்கியிருந்த 16 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும், 55 பணியாளர்கள் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதேப்போன்று அருணாச்சல பிரதேசம் திபாங் பள்ளத்தாக்கில், கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா தலமான கொண்ட திபாங் பள்ளத்தாக்கில் அனினி பகுதிக்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் திடீரென கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக பயணித்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேற்கொண்டு பயணிக்க முடியாமல் பரிதவித்தனர்.
பயணிகள் சுதாரித்துக் கொண்டதால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அந்த பாதை மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Uttarakhand (Uttaranchal)
February 28, 2025 3:16 PM IST


