Last Updated:
கேரளா 8 விருதுகளைப் பெற்றிருந்தாலும், அறிவிக்கப்பட்ட 5 மிக உயரிய ‘பத்ம விபூஷண்’ விருதுகளில் 3 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தென்னிந்திய மாநிலத்தை சேர்ந்த சாதனையாளர்கள் அதிக விருதுகளை வென்றுள்ளார்கள்.
இந்தியாவின் உயரிய குடிமை விருதுகளான பத்ம விருதுகள் 2026 பட்டியலில், மாநில வாரியாகப் பார்க்கும்போது மகாராஷ்டிரா 15 விருதுகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் நடிகர் தர்மேந்திராவிற்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு 13 விருதுகளுடன் இரண்டாம் இடத்தை அலங்கரிக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கள்ளிப்பட்டி ராமசாமி பழனிசாமி (மருத்துவம்) மற்றும் எஸ்.கே.எம். மயிலானந்தன் (சமூக சேவை) ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் தலா 11 விருதுகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளன. இந்த ஆண்டு பத்ம விருதுகளில் தென்னிந்திய மாநிலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, மொத்தம் அறிவிக்கப்பட்ட 131 விருதுகளில் 40 விருதுகளைத் தென்னிந்திய மாநிலங்களே தட்டிச் சென்றுள்ளன.
கேரளா 8 விருதுகளைப் பெற்றிருந்தாலும், அறிவிக்கப்பட்ட 5 மிக உயரிய ‘பத்ம விபூஷண்’ விருதுகளில் 3 விருதுகளை (பி.டி. உஷா உட்பட) கேரளா பெற்று சாதனை படைத்துள்ளது.


