• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

 பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலத்திலிருந்து 16.2 மில்லியன் ரிங்கிட்  போதைப்பொருட்கள் பறிமுதல்  | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
 பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலத்திலிருந்து 16.2 மில்லியன் ரிங்கிட்  போதைப்பொருட்கள் பறிமுதல்  | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிள்ளானில் பதிவு செய்யப்படாத வழிபாட்டுத் தலம் ஒன்றிலிருந்து, 16.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த இடம் போதைப்பொருட்களைச் சேமித்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த இடத்தில் பகுதிநேர ஊழியராகப் பணியாற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாக சிலாங்கூர் மாநில காவல்துறைத் தலைவர் ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளதாக ‘பெரித்தா ஹரியான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 13 முதல் 19ஆம் தேதி வரை, சிலாங்கூர் மாநில காவல்துறை போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட ஐந்து தனித்தனி நடவடிக்கைகளில், இந்த வழிபாட்டுத் தளம் உட்பட நான்கு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகள் நான்கு வெவ்வேறு போதைப்பொருள் கடத்தல் கும்பல்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 81.3 கிலோ எடையுள்ள கஞ்சா மொட்டுகள் அடங்கிய 129 பொட்டலங்கள், 37 கிலோ எடையுள்ள கஞ்சா அடங்கிய 327 பொட்டலங்கள், 3,510 திரவ கெத்தமைன் குப்பிகள், 40 கிலோ கெத்தமைன், 84 பாட்டில்களில் திரவ எக்ஸ்டஸி, 20.6 கிலோ ஹெராயின், கூடுதலாக 25.4 கிலோ கெத்தமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும், உள்ளூர் சந்தேக நபர்கள் நால்வரிடமிருந்து ஹோண்டா அக்கார்டு, புரோட்டான் சாகா கார்கள் உட்பட 54,835 ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் என்று ஷாசெலி கஹார் தெரிவித்தார். இவை போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடையவை என்று நாங்கள் கருதுகிறோம். இருப்பினும், இதில் குற்றக்கும்பல்கள் அல்லது ரகசிய அமைப்புகளுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று இன்று சிலாங்கூர் மாநில காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

19 முதல் 48 வயதுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என மொத்தம் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 1952ஆம் ஆண்டு அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். இவர்கள் உள்ளூர், அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது. இவர்கள் மலேசியாவிற்குச் சமூக வருகை அனுமதிச் சீட்டின்  மூலம் வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு சந்தேக நபர்களில் சிலர் கைது செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு வந்தனர். மற்றவர்கள் சில நாட்களுக்கு முன்பே வந்தனர்.

அவர்கள் தங்கள் அடுத்த இடங்களுக்குப் பயணம் செய்வதற்கு முன்பு கே.எல்.ஐ.ஏ வழியாகப் பயணித்ததாக நம்பப்படுகிறது, ஆனால் நாங்கள் அவர்களின் பயணப் பைகளில் போதைப்பொருட்களைக் கண்டறிந்தோம் என்று அவர் கூறினார். அந்தப் போதைப்பொருட்கள் அண்டை நாட்டிலிருந்து வந்ததாகவும், மலேசியாவிலும் வெளிநாடுகளிலும் விநியோகம் செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டதாகவும் நம்பப்படுவதாக ஷாசெலி கூறினார். சோதனையில், ஒரே ஒரு சந்தேக நபருக்கு மட்டுமே போதைப்பொருள் உள்ளிட்ட பிற குற்றங்களுக்காக ஏழு குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்தது என்றும் அவர் கூறினார்.



Read More

Previous Post

Gold Price Drop | நகை வாங்க சரியான தருணம்.. தங்கம் விலை மெகா சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

Next Post

புத்தளத்தில் கோர விபத்து: இருவர் பரிதாப பலி; 15க்கும் அதிகமானோர் காயம்

Next Post
புத்தளத்தில் கோர விபத்து: இருவர் பரிதாப பலி; 15க்கும் அதிகமானோர் காயம்

புத்தளத்தில் கோர விபத்து: இருவர் பரிதாப பலி; 15க்கும் அதிகமானோர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin