Last Updated:
பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்க மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இம்மசோதா தாக்கலின் போது, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
கைதுசெய்யப்பட்டு 30 நாட்களுக்கு சிறையில் இருந்தாலே, பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான சட்டத் திருத்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.
இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களான அசாதுதீன் ஓவைசி, மணீஷ் திவாரி, என்.கே. பிரேம்சந்திரன், தர்மேந்திர யாதவ் மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் அவையில் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மூன்று மசோதாக்களும் நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
குறிப்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்களான கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர், “குஜராத் மாநிலத்தின் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் தார்மீக ரீதியில் தனது பதவியை ராஜினாமா செய்தாரா?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “என் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆனால், நான் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்தேன். நீதிமன்றங்களால் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் நான் விடுவிக்கப்படும் வரை நான் எந்த அரசியலமைப்பு பதவியையும் ஏற்கவில்லை” என்று தெரிவித்தார்.
August 20, 2025 3:22 PM IST
பதவி நீக்க மசோதா தாக்கல்; அமைச்சர் அமித்ஷாவுக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கும் இடையே காரசார விவாதம்


