ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தன்னை பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் காரில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரோமன் ஸ்டாரோவோயிட் ஒரு வருடம் மட்டுமே பணியில் இருந்த பிறகு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை, இருப்பினும் அரசியல் ஆய்வாளர்கள் பதவி வகித்த பகுதியில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணை தொடர்பாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது. (a)