Last Updated:
கனடா பிரதமர் மார்க் கார்னே பதவியேற்ற 10 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைத்து ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தல் நடத்த பரிந்துரைத்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற 10 நாட்களில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தல் நடத்த பிரதமர் மார்க் கார்னே கவர்னர் ஜெனரலிடம் பரிந்துரைத்துள்ளார்.
கனடா நாட்டின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக அவருடைய லிபரல் கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியதால் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகக் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தார். இதையடுத்து கனடாவின் 24வது பிரதமராக மார்க் கார்னே கடந்த வாரம் பொறுப்பேற்றார். பிரதமராகப் பொறுப்பேற்ற 10 நாட்களிலேயே கனடா நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் ஏப்ரல் 28ஆம் தேதி தேர்தல் நடத்தவும் அந்நாட்டு கவர்னர் ஜெனரலிடம் பரிந்துரைத்துள்ளார் பிரதமர் மார்க் கார்னே.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அவர், வரி விதிப்பு தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள மிரட்டலையும், கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்க உள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதற்கு எதிர்வினையாற்ற கனடாவில் வலுவான ஒரு அரசு அமைவது மிகவும் அவசியம் என்று தெரிவித்தார்.
Also Read | தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் தொடர்கிறதா? – வேல்முருகன் அளித்த பதில்!
கனடாவில் வரும் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நான்கு மாதங்களுக்கு முன்னரே தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 343 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கனடா நாடாளுமன்றத்தில் 172 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 24, 2025 7:39 AM IST


