• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றார் பிரதமர் மோடி – ஹைலைட் என்ன? | Prime Minister Narendra Modi visited RSS headquarters

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றார் பிரதமர் மோடி – ஹைலைட் என்ன? | Prime Minister Narendra Modi visited RSS headquarters
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாக்பூர்: ம​கா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் அமைந்​துள்ள ராஷ்டிரிய ஸ்வ​யம்​சேவக் சங்​கத்​தின் (ஆர்​எஸ்​எஸ்) தலை​மையகத்​துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்​முறை​யாக சென்​றார். பிரதமர் நரேந்​திர மோடி நேற்று நாக்​பூருக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​றார். மோடி பிரத​மராக பதவி​யேற்று 11 ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் ​முறை​யாக நாக்​பூரில் உள்ள ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு நேற்று சென்​றார். அப்​போது, ஆர்​எஸ்​எஸ் தலை​வர் மோகன் பாகவத் பிரதமரை அன்​புடன் வரவேற்​றார்.

பின்​னர் ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​தில் ஸ்மிருதி மந்​திரில் உள்ள அந்த அமைப்​பின் நிறு​வனர் ஹெட்​கேவர் நினை​விடத்​துக்​குச் சென்று அஞ்​சலி செலுத்​தி​னார். அப்​போது, இந்​தி​யா​வின் அழி​யாத கலாச்​சா​ரத்​தின் ஆலமரம் இந்த ஆர்​எஸ்​எஸ் சங்​கம் என்று கூறி​னார்.

முன்பு அடல் பிஹாரி வாஜ்​பாய் 3-வது முறை​யாக பிரதமர் பதவி வகித்​த​போது கடந்த 2000-ம் ஆண்​டில் ஆர்​எஸ்​எஸ் தலை​மையகத்​துக்கு வருகை தந்​தார். அதேபோன்று தற்​போது பிரதமர் மோடி​யும் மூன்​றாவது முறை​யாக பதவி​யேற்​றதற்கு பிறகே நேற்று இங்கு வருகை தந்​துள்​ள​தாக அந்த சங்​கத்​தின் நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

ஸ்மிருதி மந்​திரில் அமைந்​துள்ள ஆர்​எஸ்​எஸ் நிறு​வனர் கேசவ் பலி​ராம் ஹெட்​கேவர் மற்​றும் எம்​.எஸ். கோல்​வால்​கர் நினை​விடங்​களுக்​கும் சென்று பிரதமர் மோடி மரி​யாதை செலுத்​தினார். அப்போது ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் உடனிருந்​தார்.

‘‘ஹெட்​கேவர் மற்​றும் கோல்​வால்​கர் ஆகிய இரு​வரின் நினை​விடம் லட்​சக்​கணக்​கான சுயம்​சேவக் தொண்​டர்​களுக்கு உத்​தவேகம் அளிக்​கும் இடமாக உள்​ளது. அவர்​கள் நாட்​டின் நலனுக்​காக தங்​களை அர்ப்​பணித்​துக் கொண்டு மக்​களுக்கு சேவை​யாற்றினர்’’ என்று பிரதமர் மோடி கூறி​னார்.

அம்​பேத்​கர் காட்​டிய வழி​யில் மோடி அரசு: மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் உள்ள தீக்ஷா பூமிக்கு நேற்று பயணம் மேற்​கொண்ட பிரதமர் மோடி அங்கு பி.ஆர். அம்​பேத்​கருக்கு அஞ்​சலி செலுத்​தி​னார்.

பின்னர், அவர் கூறிய​தாவது: சமூக நீதி மற்​றும் ஒடுக்​கப்​பட்ட மக்​களுக்கு அதி​காரமளிக்​கும் சின்​ன​மாக நாக்​பூரில் உள்ள தீக்ஷா பூமி உயர்ந்து நிற்​கிறது. நாம் கண்​ணி​யத்​துட​னும், சமத்​து​வத்​துடனும் வாழ்​வதை உறுதி செய்​யும் அரசி​யலமைப்பை வழங்​கியதற்​காக டாக்​டர் பாபா​சாகேப் அம்​பேத்​கருக்கு இந்​திய தலை​முறை​யினர் எப்​போதும் நன்​றி​யுடன் இருப்​பர்.

அவர் காட்​டிய பாதை​யில்​தான் எனது அரசு எப்​போதும் நடந்து வரு​கிறது. அம்​பேத்​கர் கனவு கண்ட இந்​தி​யாவை நனவாக்க இன்​னும் அதிக உறு​திப்​பாட்​டுடன் உழைக்க வேண்​டும். அதில் நாங்​கள் இன்​னும் தீவிர​மாக உள்​ளோம் என்​பதை வலி​யுறுத்​துகிறோம்.இவ்​வாறு பிரதமர் கூறி​னார்.

அரசமைப்பு சட்​டத்தை அழிக்க மோடி தலை​மையி​லான அரசு திட்​ட​மிட்டு செய​லாற்றி வரு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி உள்​ளிட்ட எதிர்க்​கட்​சி​யினர் தொடர்ந்து குற்​றம்​சாட்டி வரும் நிலை​யில் அம்​பேத்​கர் குறித்து பிரதமர் இவ்​வாறு கூறி​யுள்​ளது அரசி​யல் முக்​கி​யத்​து​வம்​ வாய்ந்​த நிகழ்​வாக பார்​க்​கப்​படுகிறது.



Read More

Previous Post

கரக் நெடுஞ்சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் சகோதரர்கள், தாயார் எனக் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்

Next Post

சென்னையில் பிரேசில் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட கால்பந்து போட்டி… பிரபலங்கள், ரசிகர்கள் கண்டுகளித்து உற்சாகம்

Next Post
சென்னையில் பிரேசில் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட கால்பந்து போட்டி… பிரபலங்கள், ரசிகர்கள் கண்டுகளித்து உற்சாகம்

சென்னையில் பிரேசில் ஜாம்பவான்கள் கலந்து கொண்ட கால்பந்து போட்டி... பிரபலங்கள், ரசிகர்கள் கண்டுகளித்து உற்சாகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin