சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆன பிறகும், தோனிக்கு ரசிகர் பட்டாளம் கொஞ்சமும் குறையாமல் உள்ளது அவரின் வெற்றிகளுக்கு ஒரு சாட்சியமாக உள்ளது. கிரிக்கெட்டில் அனைத்து வித்தைகளையும் கற்று, அதைச் சரியாகப் பயன்படுத்தினாலும், பொருளாதார விவகாரங்களிலும் அவர் வெற்றியடைந்தவராகவே உள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு சொந்தமான 10 அதிக விலை மதிப்புடைய சொத்து விவரங்களை பார்க்கலாம். அவருக்கு 7 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் வரை இருக்கலாம். இந்த வீட்டில் குதிரைகள், நாய்கள், பறவைகள் என ஏராளமான விலங்குகளை தோனி பராமரித்து வருகிறார். மேலும் நீச்சல் குளம், வயல், தோட்டங்கள் என பரந்து விரிந்ததாக இந்த பண்ணை வீடு உள்ளது.
இதனை கைலாஷ்பதி என்று அழைக்கிறார்கள். மேலும் தோனிக்கு சொந்தமாக மும்பையில் மேற்கு அந்தேரியில் வீடு உள்ளது. அரபிக்கடலைப் பார்க்கும் வகையில் இந்த வீட்டை தற்போது தோனி புதுப்பித்து வருகிறார்.
தோனியிடம் ஃபெராரி, ஆடி, லேண்ட் ரோவர் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்கள் உள்ளன. தோனிக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியும். 10 லட்ச ரூபாய் முதல் 50 லட்ச ரூபாய் வரையிலான 20-க்கும் அதிகமான சூப்பர் பைக்குகளை தோனி வைத்துள்ளார்.
இதேபோன்று தோனியிடம் பல்வேறு ஜீப் வகைகளும் உள்ளன. ஆடம்பரமான, உயர் ரக வாட்சுகளை வாங்குவதில் தோனி ஆர்வம் காட்டுகிறார். அவரிடம் ரோலக்ஸ், படேக் பிலிப், ரிச்சர்டு மில்லி உள்ளிட்ட சுமார் 50 லட்ச ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள வாட்சுகள் ஏராளம் உள்ளன. சென்னையின் எஃப்.சி. என்ற கால்பந்தாட்ட அணியின் இணை உரிமையாளராகவும் தோனி உள்ளார்.
இன்னும் சில விளையாட்டுகளிலும் தோனி முதலீடு செய்திருக்கிறார். அத்துடன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தோனி தொடங்கியுள்ளார். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்படுகின்றன.
இதேபோன்று சுமார் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள பிரைவேட் ஜெட் தோனியிடம் உள்ளது. ஆடம்பரமிக்க இந்த பிரைவேட் ஜெட் மூலமாக அவர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார். இதனால் அவரால் நேரத்தை மிச்சப்படுத்த முடிகிறது.
தோனியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டின்படி சுமார் 1040 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை தவிர்த்து பல்வேறு பிசினஸ் மூலமாக தோனிக்கு தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கிறது. அவருடைய சொத்து மதிப்பு என்பது தோனியின் ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தொழில் வியூகம் ஆகியவற்றின் மூலம் கிடைத்துள்ளதாக நிபுணர்கள் பாராட்டுகிறார்கள்.
July 07, 2025 1:49 PM IST