• Login
Tuesday, July 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

பண்டார் மக்கோத்தா செராஸில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: கொலையாளிகளுக்குப் போலீசார் தீவிர வலைவீச்சு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
பண்டார் மக்கோத்தா செராஸில் வாலிபர் கத்தியால் குத்திக் கொலை: கொலையாளிகளுக்குப் போலீசார் தீவிர வலைவீச்சு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


காஜாங்:

பண்டார் மக்கோத்தா செராஸ் (Bandar Mahkota Cheras) பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காஜாங் மாவட்டக் காவல் துறை கொலை வழக்கைப் பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இன்று காலை 8:40 மணியளவில் அப்பகுதியில் நபர் ஒருவர் சுயநினைவின்றி விழுந்து கிடப்பதாகப் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்பு வந்ததாகக் காஜாங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டென்ட் கமிஷனர் நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த வாலிபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். உயிரிழந்தவரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் கண்டெடுக்கப்படவில்லை.

தடயவியல் பிரிவினருடன் (Forensics team) நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் சடலத்தில் கண்டறியப்பட்டுள்ளன.

காஜாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வு முடிவில், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கத்திக்குத்து காயங்களால் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்துக் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் (கொலை வழக்கு) விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டறியவும், கொலையாளிகள் மற்றும் சாட்சிகளைத் தேடவும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாகப் புலனாய்வு அதிகாரி உதவிப் போலீஸ் சுப்ரெண்டெண்ட் (ASP) ஓங் எங் இயூவை 012-696 6849 என்ற எண்ணிலோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தையோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



Read More

Previous Post

10 நாள் போர் நிறுத்தம்.. மீண்டும் களத்தில் குதிக்கும் பாகிஸ்தான்.. ஈரான் முடிவு என்ன? | Pakistan & Qatar Propose 10-Day Ceasefire as US-Iran War Escalates with $10M Bounty on Trump

Next Post

Tamilmirror Online || பன்றி மூக்குடன் பிறந்த அதிசய தவளை

Next Post
Tamilmirror Online || பன்றி மூக்குடன் பிறந்த அதிசய தவளை

Tamilmirror Online || பன்றி மூக்குடன் பிறந்த அதிசய தவளை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin