விமான நிலையத்தில் தனது வருகையை அறிந்து கூடியிருந்த நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் மற்றும் மதுரை மக்களுக்கு வணக்கம் தெரிவித்த விஜய், உங்களின் அன்புக்கு கோடான கோடி நன்றிகள் என தெரிவித்தார். இன்றைய வருகை திரைப்படப் பணிகளுக்காக மட்டுமே என்று விளக்கினார். “நான் இன்று ‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறேன். ஒரு மணி நேரத்தில் விமானம் தரையிறங்கி, என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன்,” என்று கூறியிருந்தார். மேலும், விரைவில் தவெக சார்பில் மதுரையில் மற்றொரு சந்தர்ப்பத்தில் ரசிகர்களையும் மக்களையும் சந்தித்து பேசுவதாக உறுதியளித்தார்.

