வழக்கமான வருமான தேவைகளை நிர்ணயித்தல்: முதலில் பணி ஓய்வு பெற்ற பிறகு ஏற்படக்கூடிய வழக்கமான செலவுகள் பற்றிய புரிதலும், திட்டமிடலும் அவசியம். மளிகை சாமான், கரண்ட் பில், கேஸ் பில், பயணம், மருத்துவச் செலவுகள், இன்சூரன்ஸ் பிரீமியம் ஆகியவை மாதாந்திர செலவுகளாக அமைகின்றன. ஹெல்த் செக்கப், சொத்து வரிகள் மற்றும் இன்சூரன்ஸ் ரின்யூவல் ஆகியவை ஆண்டுவாரியான செலவுகளாக இருக்கின்றன. வீட்டை புதுப்பித்தல், கார் பழுதுபார்த்தல், குடும்ப விசேஷங்கள் போன்றவை பெரிய அளவிலான செலவுகள். அதுமட்டுமல்லாமல் பொழுதுபோக்கு, அவுட்டிங் செல்வதற்கான செலவுகள், நமக்கு ஹாபியில் ஈடுபடும்போது ஆகக்கூடிய செலவுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.


