Last Updated:
இது ஒரு தனிநபர் மசோதா என்பதால், இது சட்டமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
பணி நேரம் முடிந்தால் அலுவலக போன் கால்கள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதில் அளிக்க அவசியம் இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மக்களவையில் தனி நபர் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளியன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே இந்த மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த “Right to Disconnect Bill” (தொடர்பைத் துண்டிக்கும் உரிமை மசோதா) என்பது, பணியாளர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல்தொடர்புகளுக்குப் பதிலளிக்க மறுக்கும் சட்டப்பூர்வ உரிமையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த மசோதாவில் பின்வரும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. பணியாளர்கள் அலுவலக நேரம் முடிந்த பிறகும், விடுமுறை நாட்களிலும் வேலை தொடர்பான எந்தவொரு மின்னணுத் தகவல்தொடர்புகளுக்கும் (அழைப்புகள், மின்னஞ்சல்கள், மெசேஜ்கள்) பதிலளிக்க வேண்டியதில்லை.
ஒருவர் அலுவலக நேரம் முடிந்த பிறகு அழைப்புகளுக்குப் பதிலளிக்க மறுத்தால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது.
பணியாளர் தனது விருப்பத்தின் பேரில், அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை செய்ய ஒப்புக்கொண்டால், அவருக்குச் சாதாரண ஊதிய விகிதத்தில் ஓவர் டைம் சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது ஊதியம் இல்லாத ஓவர் டைம் வேலைகள் உருவாவதைத் தடுக்க உதவுகிறது.
இந்த உரிமையைப் பாதுகாக்கவும், நிறுவனங்கள் விதிகளைக் கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்தவும் ‘ஊழியர்கள் நல ஆணையம்’ (என்ற ஓர் அமைப்பு உருவாக்கப்படும் என்று மசோதா முன்மொழிகிறது. இது போன்ற இன்னும் சில முக்கிய அம்சங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
December 07, 2025 3:46 PM IST
‘பணிநேரம் முடிந்தால் ஆபிஸ் அழைப்புகளுக்கு பதிலளிக்க தேவையில்லை?’ – மக்களவையில் மசோதா அறிமுகம்


