தங்கள் பணத்தை பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்ய விரும்பும் பலருக்கும் ஏற்ற திட்டங்களாக இருக்கின்றன பல்வேறு வங்கிகள் வழங்கி வரும் FD எனப்படும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள். நீங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி!
நாட்டில் இருக்கும் பல வங்கிகள் தங்களது FD திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை சமீபத்தில் உயர்ட்னிய உயர்த்திய நிலையில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவும் அதன் FD-க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. தற்போது 333 நாள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்கு, வழக்கமான குடிமக்களுக்கு 7.4% சிறப்பு வட்டி விகிதத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்குகிறது.
சீனியர் சிட்டிசன்களுக்கான FD வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா:
333 நாள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 50 பேஸிஸ் பாயின்ட்ஸ்கள் (பிபிஎஸ்) வழங்கப்படுகின்றன. இதனால் 60 வயதிற்கும் குறைவான வாடிக்கையாளர்கள் 7.4% வட்டி பெறும் நிலையில், 60 வயதிற்கும் மேற்பட்ட சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9%-ஆக உள்ளது. தவிர கூடுதல் 75 bps வழங்கப்படுவதால் மேற்கண்ட அதே மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்கு சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.15% வருடாந்திர வட்டி விகிதம் கிடைக்கும்.
– 399 நாட்கள் காலவரையறை கொண்ட FD திட்டத்திற்கு வழக்கமான குடிமக்களுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதமும், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75% வட்டி விகிதமும் மற்றும் சூப்பர் சிட்டிசன்களுக்கு 8% வட்டி விகிதத்தையும் வங்கி வழங்குகிறது.
இதையும் படிக்க:
பிக்சட் டெபாசிட்டில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கிகள்!
– 181 முதல் 332 நாட்களுக்கு இடைப்பட்ட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கான வட்டி விகிதம் 6.35%-ஆகவும் மற்றும் 121 முதல் 180 நாட்களுக்கு இடைப்பட்ட மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கு ஆண்டுக்கு 5% வட்டி விகிதத்தையும் இந்த வங்கி தற்போது வழங்குகிறது.
– 3 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழக்கமான குடிமக்களுக்கு 6.70%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.20% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.45% வட்டி விகிதமும் வழங்குகிறது.
– 998 நாட்கள் முதல் 3 வருடங்களுக்கும் குறைவான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கு (999 நாட்கள் திட்டத்தை தவிர, இது 6.4% வட்டி விகிதத்தை வழங்குகிறது) வழக்கமான குடிமக்களுக்கு 6.60%, சீனியர் சிட்டிசன்களுக்கு 7.10% மற்றும் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.35% வட்டி விகிதத்தை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்குகிறது.
– அதே நேரம் 3 முதல் 10 ஆண்டுகள் வரையிலான மெச்சூரிட்டி பீரியட் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு இந்த வங்கி 6.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேற்கண்ட இந்த திருத்தப்பட்ட கட்டணங்கள் கடந்த ஆகஸ்ட் 2, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா FD விகிதங்கள் Vs பிற வங்கிகளின் FD விகிதங்கள்:
வேறு சில வங்கிகளும் ஸ்பெஷல் tenures உடன் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக பேங்க் ஆஃப் பரோடா 399 நாள் FD திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதத்தையும், பஞ்சாப் நேஷ்னல் பேங்க் 400 நாள் FD திட்டத்திற்கு 7.25% வட்டி விகிதத்தையும், HDFC வங்கி 55 மாத FD திட்டத்திற்கு 7.40% வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
