Last Updated:
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணக் குவியல் விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்ய மத்திய அரசு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பணக் குவியல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பணக் குவியல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு படி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடந்த மாதம் அனுப்பி வைத்தார்.
விசாரணையில் நீதிபதி வீட்டில் பணக்குவியல் இருந்தது உறுதியானதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில் வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக எதிர்க்கட்சிகளிடம் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதத்தின் இறுதியில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.


